சிங்கப்பூரில் மஹிந்தவுக்கு பாதுகாப்பு வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு
தனிப்பட்ட தேவைக்காக அண்மையில் சிங்கப்பூர் சென்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு விசேட பாதுகாப்பை வழங்குமாறு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விடுத்த கோரிக்கையை அந்நாட்டு அரசாங்கம் நிராகரித்துள்ளது.
மகிந்த ராஜபக்சவுக்கு சிங்கப்பூரில் உயிராபத்தோ அழுத்தங்கள் ஏற்படவோ வாய்ப்பில்லை என சிங்கப்பூர் பதிலளித்துள்ளது.
சிங்கப்பூரில் எவருக்கும் எந்த உயிராபத்தும் ஏற்படாது எனவும் சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்சவுடன் அவரது இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச, யோஷித்த ராஜபக்சவின் திருமணம் செய்ய உள்ள பெண்ணின் தந்தையான நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்கு பண்டார ஆகியோரும் சிங்கப்பூர் சென்றுள்ளனர்.
மகிந்த ராஜபக்ச அண்மையில் மலேசியாவுக்கு விஜயம் செய்திருந்த போது அங்கு வாழும் தமிழர்கள் அவருக்கும் அவருடன் சென்றவர்களுக்கும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.
Post a Comment