சிங்களவர்கள் அல்லாதவர்களை நியமித்துள்ளதே எமக்குள்ள பிரச்சினை - ஞானசார
அர்ஜூன் அலோசியஸ் திறைசேரி பிணை முறிப்பத்திர கொடுக்கல் வாங்கல்களில் சம்பாதித்த பணத்தை கொண்டு சிங்கள வர்த்தகர்களுக்கு சொந்தமான நிறுவனங்களை கொள்வனவு செய்து சிங்கள விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்,
மத்திய வங்கியின் ஊழல் மூலம் பணத்தை சம்பாதித்துள்ள அர்ஜூன் மகேந்திரனின் மருமகன் நாட்டில் உள்ள சில ஊடகங்களை கொள்வனவு செய்துள்ளார்.
பிணை முறிப்பத்திர மோசடியில் சம்பாதித்த பணத்தில் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் அவரது மருமகன் ஆகியோர் கொள்வனவு செய்துள்ள ஊடகங்கள் என்ன என்பதை தயவு செய்து கூறுமாறு அவர்களை பாதுகாத்து வரும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட கோஷ்டியிடம் கேட்கின்றோம்.
நாட்டை ஆட்சி செய்யும் ஆட்சியாளர் நாட்டின் முக்கியத்துவமிக்க இடங்களில் சிங்களவர்கள் அல்லாதவர்களை நியமித்துள்ளதே எமக்குள்ள பிரச்சினை.
பங்குச் சந்தையில் மூன்று நான்கு பேர் இருந்து கொண்டு அவர்களுக்குரிய நிறுவனங்களை மாத்திரம் கட்டியெழுப்பி வருகின்றனர். இது இடி விழும் அநியாயம்.
சிங்களவர்கள் அல்லாத இவர்களிடம் சிங்கள வர்த்தகர்கள் சம்பந்தமான சகல தகவல்களும் இருக்கின்றன எனவும் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment