Header Ads



இனியும் குரல் கொடுப்பேன் - ரஞ்சன்

தவறிழைக்கும் அரச ஊழியர்களுக்கு எதிராக தமது குரல் எப்போதும் ஒழித்துக்கொண்டே இருக்கும் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்.

அரசாங்கத்தோடு தொடர்புபட்ட ஒருவன் என்ற வகையில் அரச அதிகாரிகள் இழைக்கும் தவறினை சுட்டிக்காட்டும் பொறுப்பு என்னிடம் இருக்கின்றது.

அரச சலுகைகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிராக நாட்டில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இதுவரைகாலமும் சூழலுக்கு எதிராக செயற்படுவோருக்காக குரல் கொடுத்து வந்தேன். இனியும் குரல் கொடுப்பேன்.

பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் வாதிகள் மற்றும் அரச உறுப்பினர்கள் வீட்டுக்கு பணம் கொண்டு வரும் போது அவர்களின் மனைவிமார் மற்றும், பிள்ளைகள் பணம் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் முறையான தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு முறையாக செயற்பட்டால் அரச சலுகைகளை அவர்கள் முறையாக பயன்படுத்த மாட்டார்கள்.

இதேப்போல் தவறிழைத்த மஹிந்தானந்த அலுத்கமகேவின் நடவடிக்கைகளை அவரது முன்னாள் மனைவியான ஆஷா பெரேரா சுட்டிக்காட்டியதன் காரணமாகவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க முடிந்தது.

நான் தவறிழைக்கவில்லை ஆனால் என்னைப்பற்றி சில அரசியல் வாதிகளும் ஊடகங்களும் தவறான கருத்துக்களை பரப்பி வருக்கின்றன என மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. " Iniyum kural koduppen " enpazalla , " thodarnthum "
    kural kodupen enru vara vendum enpazu enazu karuththu.
    " Iniyum " enpazu , innoru thadavai ippadi nantaal
    allazu nadakkaazu enruthaan porul paduvazaaga enakku
    gnapagam .

    ReplyDelete

Powered by Blogger.