'அரசாங்கத்தினால் மகிந்த ராஜபக்ச, மீண்டும் தலைதூக்க முயற்சிக்கிறார்'
அரசாங்கம் செய்யும் வேலைகளால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் தலைதூக்க முயற்சித்து வருகிறார் என பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு ஆட்சிக்கு வந்த நாம் பொறுப்புடன் வேலை செய்ய தெரிந்து கொள்ள வேண்டும்.
எனினும் அப்படி எதனையும் காணமுடியவில்லை. மகிந்த மீண்டும் தலைதூக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையிலேயே அரசாங்கம் தற்போது பணியாற்றி வருகிறது எனவும் பாலித தெவரப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment