இஸ்ரேலுடனான புதிய யுத்தம் - ஹிஸ்புல்லாஹ் எச்சரிக்கை
இஸ்ரேல் போர் விமானங்கள் சிரிய தலைநகர் டமஸ்கஸுக்கு அருகில் தாக்குதல்களை நடத்தி இருப்பதாக லெபனான் ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
லெபனான் வான் பரப்புக்குள் வட்டமிட்டிருக்கும் இஸ்ரேலிய விமானங்கள் அங்கிருந்து சிரியா மீது தாக்குதல் நடத்தி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதில் ஹிஸ்புல்லாஹ் போராளிகளின் பஸ் வண்டிகளே கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸன் நஸ்ரல்லாஹ், இஸ்ரேலுடனான புதிய யுத்தம் ஒன்று பற்றி எச்சரிக்கை விடுத்த நிலையிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
“இஸ்ரேல் லெபனானுடன் யுத்தம் ஒன்றுக்கு வரும் முன் அது ஒன்றுக்கு மில்லியன் தடவை எண்ணிப்பார்த்துக் கொள்ளட்டும். எந்த ஒரு அச்சுறுத்தலுக்கும் நாம் தயாராகவே இருக்கிறோம்” என்று நஸ்ரல்லாஹ் எச்சரித்திருந்தார்.
சிரிய உள்நாட்டு யுத்தத்தில் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசுக்கு ஆதரவாக போராடி வரும் ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் ஆயுத பலத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் கடந்த காலங்களிலும் சிரியாவில் பல தடவை வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
Post a Comment