கேப்பாப்புலவு நீதியும், யாழ்ப்பாணம் சோனகதெருவுக்கு அநீதியும்..!!
-முஹம்மத்-
கேப்பாபுலவில் வாழ்ந்த 84 குடும்பங்களின் காணிகள் இராணுவத்தால் விடுவிக்கப் படவில்லை என்று கேப்பாப் புலவு மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்த போராட்டத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களும் தமது ஆதர்வுகளை வழங்கியிருந்தனர். போராட்டம் நடத்தும் பொதுமக்களுக்காக உணவு ஏற்பாடுகளையும் அவர்கள் செய்திருந்தனர். அதேவேளை இந்த போராட்டத்துக்கு யாழ்ப்பாண முஸ்லிம்களும் தமது ஆதரவை தெரிவித்து மாணவர்களை வீதியில் இறக்கி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். ஒஸ்மானியா கல்லூரி மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றியிருந்தனர்.
இவ்வாறு தமிழர் தரப்பு நியாயமான போராட்டங்களுக்கு முஸ்லிம்கள் ஆதரவு கொடுத்து வந்தாலும் முஸ்லிம்கள் விடயத்தில் தமிழ் அதிகாரிகள் அரசியல் வாதிகள் நியாயமாக நடந்து கொள்வதில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
முல்லைத்தீவு தண்ணீரூற்று பிரதேசத்தில் நிலவும் இடப் பற்றாக் குறை காரணமாக முஸ்லிம்கள் புதிய காணிகளை பெற வேண்டியது காலத்தின் தேவையாக இருந்தது. அவ்வாறு காணியொன்று பெறப்பட்ட போது அதற்கெதிராக தமிழர்கள் சிலர் செயற்பட்டிருந்தார்கள். இதனால் அந்தத் திட்டம் பாதியிலே விடப்பட்டுள்ளது.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் உடைந்து போயுள்ள ஐநூறு வீடுகளைத் திருத்த கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. முஸ்லிம்கள் சமர்ப்பித்த 3200 மீள்குடியேற்ற விண்ணப்பங்களில் 150 குடும்பங்களுக்கே வீடமைப்பு உதவிகள் வழங்கப் பட்டுள்ளன. மிகுதி 3050 குடும்பங்களின் மீள்குடியேற்றம் நஷ்ட ஈடு என்பன இழுத்தடிக்கப் படுவதுடன் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.
சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் பரச்சேரி வயல் பிரதேசத்தில் 25 ஏக்கர் காணிகள் விவசாய செய்கைக்கு உட்படுத்தப் படாமல் கைவிடப்பட்டிருந்தன. பின்னர் இவை முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் விற்கப் பட்டிருந்தன. இந்த காணிகளின் தரைகள் அருகிலுள்ள நாவாந்துறை கடலில் தாக்கத்தினால் உவர்ப்பு நிலங்களாக மாறி விவசாயம் செய்ய முடியாத பயனற்ற நிலங்களாக மாறியிருந்தது. இதனால் அவை குடியிருப்புத் தேவைகளுக்காக விற்கப் பட்டன.
முஸ்லிம்கள் இப்பிரதேசத்தில் வீடமைக்க அங்கீகாரம் கேட்ட வேளையில் அவை வயல் காணிகள் அவற்றில் நீங்கள் குடியிருப்புகளை அமைக்க முடியாது என பிரதேச செயலகமும் மாநகர சபையும் கூறிவிட்டன. கேப்பாப் புலைவை பொருத்தவரை அவர்களுக்கு குடியிருக்க காணிகளும் வீடுகளும் வேறு இடங்களில் உள்ளன. அந்த 20 ஏக்கர் காணி விவசாய காணிகளும் ஏணைய காணிகளையும் உள்ளடக்கிய தொகுதி ஆகும். அப்படியிருந்தும் கேப்பாப்புலவு மக்கள் தமது நிலத்துக்காக போராட்டம் நடத்துகின்றனர். அதற்கு யாழ் முல்லை முஸ்லிம்களும் ஆதரவு தெரிவித்து வருகின்ரனர். இந்த 84 குடும்பங்களில் கேப்பாப் பிலவுக்கு இவ்வளவு போராட்டங்களை நடத்தும் தமிழர்கள் முஸ்லிம்கள் விடயத்தில் அநீதியாக நடந்து கொள்வது முறையா? யாழ் பல்கலைக்கழக மாணவர்களே! தமிழ் அரசியல் வாதிகளே! இது உங்களின் கவனத்துக்கு.
Nobody ask ur Muslim support. ..We know ur crocodile tear
ReplyDelete