நல்லாட்சி அரசாங்கத்திற்கு 'கோட்டா போபியா' எனும் விசித்திர நோய்
நல்லாட்சி அரசானது கோட்டா போபியா எனும் விசித்திரமான நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமயக் கட்சித் தலைவரும் ஒருங்கிணைந்த எதிரணியின் உறுப்பினருமான உதய கம்மன்பில நேற்று தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அரசானது நுகேகொடையில் ஏற்பட்ட மஹிந்த சூறாவளியைக் கண்டு தற்போது அச்சமடைந்துள்ளதாகவும் அவர் கூறி யுள்ளார்.
கோட்டையில் அமைந்துள்ள தமது கட்சித்தலைமையகத்தில் இடம்பெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கல ந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கூட்டு எதிரணியினரால் நுகேகொடையில் நடத்தப்பட்ட கூட்டம் தொடர்பிலேயே அரசாங்கம் தற்போது தீவிரமாக கதைத்து வருகி ன்றது.
இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கியமானதொரு கூட்டமாக பார்க்கப்படும் இது, நாம் எதிர்ப்பார்த்தைவிடவும் வெற்றியளித்து ள்ளது என்றே கூறவேண்டும்.
எனினும், இந்த நல்லாட்சி அரசோ இந்தக் கூட்டம் தோல்வியடைந்து விட்டதாக தொடர்ந்தும் கூறிவருகின்றது. அரசின் இந்தக் கரு த்திலேயே இந்தக் கூட்டம் வெற்றி பெற்று விட்டது என்பது தெளிவாகின்றது. இதன்மூலம் மஹிந்த சூறாவளியைக் கண்டு அரசு அஞ்சுகிறது என்பதே அர்த்தமாகும்.
அத்தோடு, இந்த அரசானது தற்போது எதற்கெடுத்தாலும் கோட்டாபய ராஜபக்ஷவை குறிவைத்துதான் கருத்துக்களை வெளியிடுகி ன்றது. ஊடகவியலாளர் லசந்தவின் மரணம் உள்ளிட்ட பல மரணங்கள், கடத்தல்களுக்கெல்லாம் தேவையில்லாமல் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாவின் பெயர் பயன்படுத்தப்படுகின்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றபோது, லசந்தவின் மரணம் தொடர்பில் தற்போது அமைச்ச ராக இருக்கும் சரத்பொன்சேகாவும் பொறுப்புக் கூறவேண்டும் என்று பாராளுமன்றில் வைத்து கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் சபையில் உரையாற்றும்போது மிகவும் நிதானத்துடனும் பொறுப்புடனும் தான் உரையாற்றுவார், தனக்கும் இந்த படுகொலை தொடர்பில் ஏதோ ஒரு தகவல் தெரிந்துள்ளது என்பதையே அப்போது ரணில் விக்கிரமசிங்க வெளிப்படு த்தியுள்ளார்.
ஆனாலும், இன்றுவரையிலும் இந்த படுகொலை தொடர்பில் அவரிடம் எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.
இதேநிலைமை தொடர்ந்தால், ரவிராஜின் வழக்குக்கு ஏற்பட்ட கதிதான் லசந்தவின் விவகாரத்திலும் ஏற்படும்.
எனவே, அரசு கோட்டாபோபியா நோயிலிருந்து விடுபட்டு, உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று குறி ப்பிட்டார்.
Post a Comment