இந்த முஸ்லிம் குடும்பங்களுக்கு, உதவ முன்வாருங்கள்
-Jan Mohamed-
யாழ்ப்பாணம் சோனக்தெருவிலுள்ள சின்னப் பள்ளிவளாகத்தைச் சேர்ந்த பெரிய குளத்துக்கும், பொம்மைவெளி முதலாம் குறுக்குக்கும் இடைப்பட்ட பள்ளக் காணியில் உள்ளதே இந்த அத்திப் பட்டி கிராமம் ஆகும்.
இங்கு மீளக்குடியேறிய காணியற்ற 34 குடும்பங்கள் குடியேறி தகரத்தினாலும் கிடுகுகளினாலும் கொட்டில் அமைத்து மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் இருக்கும் இந்தக் காணி மீராணியா டிரஸ்டால் மையத்துகளை அடக்குவதற்கு என்று வழங்கப்பட்டிருந்தாலும் கடந்த பல தசாப்தங்களாக ஒரு மையத்து கூட இந்தக் காணியில் அடக்கப் படவில்லை.
இதில் வாழ்பவர்கள் தற்காலிகமாக வாழமுடியும் என்றிருந்தாலும் என்றாவது அந்த இடம் மையத்து அடக்க தேவைப்பட்டால் அவர்கள் தமது தற்காலிக இடங்களைத் திருப்பிக் கொடுக்கவே வேண்டும்.
இந்த இடம் மழை காலங்களில் வெள்ளத்தில் மூழ்கி விடும். இவர்களது தங்குமிடங்கள் வெரும் கொட்டில் அடிப்படையில் தகரங்களாலான கூரைகளையும் வேலிகளாலான வேலிகளையும் கொண்டு காணப் படுகின்றது. மேலும் இம்மக்களுக்கு 34 குடும்பங்களுக்கு 4 கதவில்லாத கக்கூசுகள் தான் உண்டு. அதற்கு நீர் வசதியும் இல்லை. கிணறும் இல்லை.
இவர்களுக்கு 10 அல்லது 12 பரப்பு காணி வாங்கி அதனை 3 அல்லது 4 பேர்ச் படி பிரித்துக் கொடுக்கலாம். பொம்மைவெளியில் 10 பேர்ச் கொண்ட ஒரு காணி 6 முதல் 8 இலட்சம் வரை செல்கின்றது. சாபி நகர் பக்கம் 4 முதல் 6 இலட்சம் வரை விலையாகும். சோனகதெருவில் 13 முதல் 20 இலட்சம் வரை செல்கின்றது.
இந்த திட்டத்தை நடைமுறைப் படுத்தப் போவது யார்? தற்காலிகமாக மண் நிரப்ப நபர்கள் உள்ளார்கள். நிரந்தர் தீர்வை முன்வைக்கப் போவது யார்?
தொடர்புகளுக்கு - 077 329 2430
Post a Comment