Header Ads



சுவிஸ்வாழ் இலங்கை முஸ்லிம்கள், தம் பிள்ளைகளுக்கு மார்க்கக்கல்வி வழங்க பின்நிற்கக்கூடாது - ஹனீப்


இஸ்லாமிய கல்வியை வழங்க, சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லிம்கள் பின்நிற்கக்கூடாது என ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையத் தலைவரும், மஸ்ஜித்துர் ரவ்ளா பள்ளிவாசல் தலைவருமான ஹனீப் மொஹமட் தெரிவித்தார்.

சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லிம்களின் பிள்ளைகளுக்காக அல்குர்ஆன் பரிசளிப்பு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவர் தெரிவித்ததாவது,

முந்திய  வருடங்களிலும் பார்க்க, இம்முறை சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லிம்களுடைய பிள்ளைகள் தமது அதீத திறமையை வெளிக்காட்டியதை அவதானிக்கமுடிந்தது. இதில் அவர்களுடைய பெற்றோர்களின் பங்களிப்பு பிரதானமானது.

அதேவேளை இன்னும் சில பெற்றோர்கள், தமது பிள்ளகைளுக்கு மார்க்கக் கல்வி வழங்காமைக்காக வருத்தப்படுகிறார்கள். தமது பிள்ளகைளுக்கு உரிய விதத்தில், தாம் மார்க்கக் கல்வியை வழங்கியிருந்தால் தமது பிள்ளகைள் பற்றி, தாம் கவலைப்படும் நிலை ஏற்பட்டிருக்காது எனவும் அவர்கள் தற்போது உணருகிறார்கள். 

பெற்றோர்கள் உரியமுறையில் மார்க்கக் கல்வியை கற்றிருந்தால், தமது பிள்ளகைளுக்கு அதனை சொல்லிக்கொடுப்பதும் இலகுவாக அமையும்.

அதுபோன்றே சுவிஸில் இலங்கை பெற்றோர்களுக:கு பிறந்த, இளம் சந்ததியினரை நோக்கமாகக் கொண்டு, அவர்கள் எதிர்காலத்தில் இங்கு தலைமையேற்று நிகழ்வுகளை நடத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம். அவர்களுக்கு ஊற்சாகமூட்டுவதும், இதில் பங்காளராக அவர்களை இணைப்பதும் சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லிம்களின் கடமையாகும்.

எதிர்வரும் காலங்களிலும் மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசல் நிர்வாகமும், ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையமும் இலங்கை முஸ்லிம்களின் நலகளுக்காக பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. அவற்றிலும் சகலரும் பங்குகொண்டு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார்.



No comments

Powered by Blogger.