Header Ads



கத்தார் ஏர்வேஸின் அறிவிப்பு


அதிபர் டிரம்ப் தடை விதித்த ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சமீபத்தில் ஈரான், ஈராக், சிரியா சூடான், சோமாலியா, லிபியா மற்றும் ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய 90 நாட்கள் விசா தடை விதித்தார்.

மேலும் சிரியா அகதிகள் நுழைய நிரந்தர தடை விதித்தார். இது அமெரிக்காவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராடி வருகின்றனர்.

இதனிடையே, முஸ்லிம்கள் நுழைய அனுமதி மறுத்து டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு அமெரிக்காவின் சியாட்டல் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், அதிபர் டிரம்ப் தடை விதித்த ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்று கத்தார் ஏர்வேஸ் அறிவித்துள்ளது. 

அமெரிக்க நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை தொடர்ந்து தலைநகர் தோஹாவை மையமாக கொண்டு செயல்படும் கத்தார் ஏர்வேஸ், இத்தகவலை தனது வெப்சைட்டில் தெரிவித்துள்ளது. அதாவது, முறையான விசா வைத்திருப்போர் மட்டும் அமெரிக்காவுக்கு பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என கூறியுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன், சிகாகோ உள்ளிட்ட 15 நகரங்களுக்கு கத்தார் ஏர்வேஸ் தற்போது விமானங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.