ஆட்டோ சாரதி, என்றால் சும்மாவா..?
முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை சட்டத்தரணி ஒருவர் இல்லாமலேயே அனைத்து வகையான குற்றச்சாட்டுக்களையும் பொய்யாக்கி வழக்கை வென்றெடுத்த சம்பமொன்று கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று -03- இடம்பெற்றுள்ளது.
கம்பளை பொலிஸார் குறித்த சாரதி வாகனம் செலுத்தும் போது மது அருந்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 திகதியன்று வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கம்பளை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ராஜகருணா இவ்வழக்கை தற்போது நீதிபதியாகவுள்ள சந்திரானி மீகொடவிடம் ஒப்படைத்தார்.
பின்னர் கம்பளை நீதிமன்ற நீதிவான் சந்திரானி மீகொட முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பத்திரனாலகே நுவக் துசித குமார என்ற சந்தேகநபர் குறித்த நபர் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட சான்றுகளை குறுக்கு கேள்வி கேட்டு பொய்யானவை என நிரூபித்துள்ளார்.
இந்நிலையில் நீதிவான் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட சான்றுகளை பரிசீலித்த போது வாகனம் செலுத்தும் போது மது அருந்தியிருந்தமைக்கான சான்றாக இரத்தில் அற்ககோல் கலந்துள்ள அளவு 100 மி.கிராமில் 0.08 கிராம் அடங்கியிருந்தால் அவர் மது அருந்தியிருந்தார் என்பது ஊர்ஜிதமாகிவிடும் என குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் குறித்த சந்தேக நபரின் இரத்த அளவில் 0.08 சதவீத அற்கோல் மாத்திரமே அடங்கியிருந்தமையால் பொலிஸாரால் முழுமையாக தமது சான்றுகளை நிரூபிக்க முடியாது போய்விட்டது.
அத்துடன் குறித்த சந்தேக நபரின் சுவாச பரிசோதைனை அறிக்கை மன்றில் சமர்ப்பி்க்கப்பட்ட போதும் மது அறிந்தியிருந்தமைக்கான சான்றை நிரூபிக்க முடியாமையினால் நீதிவான் சந்தேக நபரை குற்றமற்றவராக அறிவித்து வழக்கிலிருந்து விடுவிப்பதாக தீர்ப்பளித்தார்.
Post a Comment