ஆர்ப்பட்டங்கள், பேரணிகளை கலைக்க நாய்களைப் பயன்படுத்த திட்டம்
சட்ட விரோத ஆர்ப்பட்டங்கள் மற்றும் பேரணிகளை கலைக்க பொலிஸ் கலத்தடுப்புப் பிரிவுக்கு மேலதிகமாக பொலிஸ் குதிரைப்படைப் படை மற்றும் மோப்ப நாய்களைப் பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் சுவீடன் மற்றும் ஸ்கொட்லன்ட்யார்ட் ஆகியவற்றின் கலத்தடுப்பு விஷேட நிபுணர்கள் பொலிஸ் மோப்ப நாய்களுக்கு அது தொடர்பிலான அடிப்படை பயிற்சிகளையும் வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்டி பொலிஸ் மோப்ப நாய் தலைமையகத்தில் 30 மோப்ப நாய்களுக்கு இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்கொட்லட்யார்ட் பொலிஸார் செயற்படும் பிரதேசங்களிலும் சுவீடனிலும் சட்ட விரோத பேரணிகளை கலைப்பதில் குதிரைகளும் மோப்ப நாய்களும் வெற்றிகரமாக கலைக்கும் நடவடிக்கைகளை செய்துள்ளதாகவும் அதனை ஒட்டிய பயிற்சிகளே இவ்வாறு வழங்கப்படுவதாகவும் குறித்த பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டினார். வீடியோ காட்சிகளை காட்டி இந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்யும் போது குறித்த மோப்ப நாய்கள் எந்த தொந்தர்வையும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஏற்படுத்தாது எனவும், எல்லை மீறி கல் வீச்சு போன்ற கலக நடவடிக்கையில் ஈடுப்படும் போது இந்த நாய்கள் எதிர் செயற்பாடுகளில் ஈடுபடும் என குறித்த உயர் பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டினார்.
(எம்.எப்.எம்.பஸீர்)
பொலிசாருக்கு கல்லறிய தயங்கி இருக்கும் மக்களுக்கு பெரும் உதவியாகிவிடும் இலேசாக நாய்க்கு எறிந்து விடுவார்கள் உலக மகா திருட்டு புத்திசாலிகள் உள்ள இலங்கையில் இந்த நாய்கள் எல்லாம் ஒரு கணக்கா.எதுக்கும் நாய்கள் அனைத்தையும் அதிக விலை வைத்து காப்புறுதி செய்துகொள்ள வேண்டும்,
ReplyDelete