பொலித்தீனை உட்கொண்ட யானை, சேற்று நிலத்தில் வீழ்ந்து தவிப்பு
பொலித்தீனை உணவாக உட்கொண்ட யானை மன்னம்பிட்டிய- நெலும்வில பிரதேசத்தில் சேற்று நிலத்தில் வீழ்ந்து கிடக்கின்றது. இக்காட்டுயானையின் நிலை பார்ப்பதற்கு கவலைக்கிடமாக உள்ளதாக வனவிலங்கு திணைக்களத்தின் கிரிதலை கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
யானை உணவுக்காக பல கிலோ பொலித்தீனை உட்கொண்டுள்ளது. இதனால் அந்த பொலித்தீன் யானையின் குதத்தில் சிக்கியுள்ள நிலையில் கடந்த 29 ஆம் திகதி சேற்று நிலத்தில் அது வீழ்ந்துள்ளது.
அதனை தொடர்ந்து கால்நடை மருத்துவர்களால் யானைக்கு 40 லீட்டர் நீரும் 3 லீட்டர் தேங்காய் எண்ணெய்யும் கலந்து கொடுத்து குதத்தில் சிக்கியிருந்த 20 கிலோகிராம் அளவிலான பொலித்தீன் அகற்றப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, நாள் ஒன்றுக்கு 30 சேலைன் போத்தல்கள் யானைக்கு வழங்கப்பட்டுள்ளது.மேலும் தற்போது சேற்று நிலத்திலிருந்து யானை பெக்கோ இயந்திரம் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளது.
Post a Comment