Header Ads



மஹிந்த மீது காதல், பொலிஸாரினால் மேலதிக விசாரணை..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வசிக்கும் உத்தியோகபூர்வ மாளிக்கைக்கு அருகில் வைத்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 7 விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ மாளிகைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவரே கடந்த 20ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைக்காக குருந்துவத்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் நின்ற, வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட தீவிர விசாரணையின் மூலம், குறித்த நபர் எந்தவித குற்றச் செயல்களுடனும் தொடர்பில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மீது உள்ள கௌரவம் மற்றும் விருப்பம் காரணமாக அவரை பார்ப்பதற்கு வருகைத்தந்ததாக இந்த நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அவர் 21ஆம் திகதி மாலை பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் குருந்துவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இன்று தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.