Header Ads



இலங்கையில் சிறுபான்மை இனங்களுக்கு எதிரான, அநீதிகளை ஆராய வேண்டும் - அல் ஹூசைன்

இலங்கையில் சிறுபான்மை மதத்தினர் மற்றும் இனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகள் குறித்து ஆராய வேண்டும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளின் சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியான செயற்பாடுகள் குறித்து மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்துள்ள அறிக்கை ஒன்றிலேயே செய்ட் அல் ஹூசைன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் சிறுபான்மை மக்கள் வாழும் மற்றும் வழிபடும் இடங்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை இம்முறை பிரித்தானியா முன்வைக்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்றைய தினம் ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடருக்கான ஒழுங்கமைப்புக் கூட்டம் நடைபெற்றது.

இதில், பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்கு தீர்வு காண்பதற்கு இலங்கைக்கு காலஅவகாசத்தை அளிக்கும் வகையில், இந்த தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டது.

இந்த தீர்மானம் பேரவையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், வரும் 28ஆம் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் உரையாற்றவுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் 27ஆம் திகதி தொடக்கம் அடுத்தமாதம் 22ஆம் நாள் வரை இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவாதம், மார்ச் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதேவேளை இலங்கை தொடர்பான தீர்மானங்களை அமெரிக்காவே முன்வைத்து வந்தது. எனினும், அமெரிக்காவில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் தெளிவான நிலைப்பாடுகள் எடுக்கப்படாத நிலையில், இம்முறை தீர்மானத்தை பிரித்தானியா முன்வைக்கவுள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலையில் தான் இலங்கையில் சிறுபான்மை மதத்தினர் மற்றும் இனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகள் குறித்து ஆராய வேண்டும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.