'ஞானசாரருடன் பேச்சு நடத்தாது, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்'
பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் அண்மையில் குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளரைச் சந்தித்து கடந்த வருடம் மூன்று மாதங்களில் 201 முஸ்லிம் தீவிரவாதிகள் மதபோதகர்கள் எனக்கூறி சுற்றுலா விசாவில் நாட்டுக்குள் பிரவேசித்திருக்கிறார்கள் என்றும் இதனால் முஸ்லிம் நாடுகளின் பிரஜைகளுக்கு சுற்றுலா விசா வழங்கப்படும் போது நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டுமெனக் கோரியிருப்பது தவறானதாகும் என ஜாதிக பலசேனாவின் செயலாளர் வட்டரக்க விஜித தேரர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியமை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே அவ்வாறு கூறியுள்ளார்.அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
இது பொய்யான தகவலாகும். சுற்றுலா விசாவில் வருவது தீவிரவாதிகளா என்பதை பாதுகாப்புத் தரப்பினரே ஆராய்ந்து தகவல் வெளியிட வேண்டும். நாட்டில் முஸ்லிம்களுக்கும் பெரும்பான்மையினருக்கும் இடையில் மீண்டும் இன முறுகலை உருவாக்கவே பொதுபல சேனா இவ்வாறு திட்டமிட்டு செயற்படுகிறது. இதனை ஜாதிக பலசேனா வன்மையாகக் கண்டிக்கிறது.மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சுற்றுலா விசாவில் வருபவர்களால் கோடிக்கணக்கான ரூபா வருமானமாக எமக்குக் கிடைக்கிறது. எமது நாட்டின் அபிவிருத்திக்காக மத்திய கிழக்கு நாடுகள் கோடிக்கணக்கில் நன்கொடை வழங்குகின்றன. இவற்றை இல்லாமற் செய்யும் முயற்சிகளிலே ஞானசார தேரர் ஈடுபட்டுள்ளார்.
சுற்றுலா விசாவில் வருபவர்கள் பலர் போதைப் பொருளை நாட்டுக்குள் கடத்தி வருகிறார்கள். தாய்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து விபசாரிகள் வருகிறார்கள். எயிட்ஸ் நோயாளிகள் வருகிறார்கள். இவர்களின் வருகையைத் தடைசெய்யும் விதத்திலே குடிவரவு – குடியகல்வு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். முஸ்லிம் சுற்றுலாப் பயணிகள் பற்றி பேசும் ஞானசார தேரர் ஏன் இவர்களைப் பற்றி பேசுவதில்லை.
அமெரிக்க ஜனாதிபதி 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவினுள் நுழையத்தடை விதித்தார். ஆனால், அந்நாட்டு நீதிமன்றம் அத்தடையை நீக்கிவிட்டது என்பதை ஞானசார தேரர் அறிந்து கொள்ள வேண்டும்.மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் உத்தியோகப்பற்றற்ற பொலிஸாக தம்மைக் கூறிக் கொண்டு செயற்பட்ட பொதுபல சேனா மீண்டும் நல்லாட்சி அரசில் இன முறுகலை ஏற்படுத்த முயற்சிக்கிறது. எனவே, அரசாங்கம் ஞானசார தேரரை அலரிமாளிகைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாது அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆமாம் இன்று ரஸ்யா தாய்லாந் விபச்சாரிகள் இலங்கைகுல் நுளைந்து செயல்படுவதை தடுத்தால் பொதுபலசேனா அங்கத்தவர்களுக்கு அதை அவர்களை அனுபவிக்க முடியாமல் போய்விடும் மேலும் கஞ்சா,ஹெரோய்ன் இலங்கைக்கு கடுத்தப்படுவதை தடுத்தால் ஞானசாரருகு தொழில் இல்லாமல் போய்விடும் கண்ணியத்திட்குறிய வட்டரக விஜித்த தேர்ரே இவைகள் பற்றி ஒரு நாளாவது இந்த கசுமாலி ஞானசார கதைத்திருப்பானா?
ReplyDelete