இஸ்மாயில் ஹனியாவுக்கு பதிலாக யஹ்யா சின்வார் - நடுங்குகிறது இஸ்ரேல்
பலஸ்தீன இஸ்லாமிய போராட்ட குழுவான ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலில் 20 ஆண்டு சிறை அனுபவித்த யஹ்யா சின்வாரை காசாவுக்கான தலைவராக தேர்வு செய்துள்ளது.
ஹமாஸ் அமைப்புக்குள் இயங்கும் கடும்போக்காளராக கருதப்படும் சின்வார் 2011ஆம் ஆண்டில் இஸ்ரேலுடனான கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கையின் கீழே விடுதலையானார். ஹமாஸ் அமைப்பில் இடம்பெற்ற உள்ளக வாக்கெடுப்பின் மூலமே சின்வார் தலைவராக நியமிக்கப்பட்டதாக அந்த அமைப்பின் நெருங்கிய வட்டாரத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
இதன்படி காசாவில் ஹமாஸ் அரசின் முன்னாள் பிரதமர் இஸ்மைல் ஹனியானின் இடத்திற்கே சின்வார் தேர்வாகியுள்ளார்.
எனினும் ஹனியான் ஹமாஸ் அமைப்பின் ஒட்டுமொத்த தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. காசாவுக்கு வெளியில் வாழ்ந்துவரும் காலித் மிஷால் ஹமாஸ் அமைப்பின் தற்போதைய தலைவராக இருந்து வருகிறார்.
ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் என்ற நாட்டை நிராகரிப்பதோடு, யூத தேசத்துடன் எந்த ஒரு விட்டுக்கொடுப்பையும் சின்வார் மறுத்து வருகிறார்.
எனினும் 1967 யுத்த நிறுத்தத்திற்கு முந்தைய எல்லைகளுக்கு இஸ்ரேல் வாபஸ் பெற்று காசா மீதான முற்றுகை கைவிடப்படும் பட்சத்தில் இஸ்ரேலுடனான உடன்படிக்கை ஒன்றுக்கு ஹமாஸ் அமைப்பின் சில தலைவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
எவ்வாறாயினும் ஹமாஸ் அமைப்பின் சாசனத்தில் இஸ்ரேலை ஒழிக்க உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஹமாஸ் அமைப்பை தீவிரவாத குழுவாக பிரகடனம் செய்துள்ளன.
இஸ்ரேலுடன் நீண்ட காலமாக மோதலில் ஈடுபட்டு வரும் ஹமாஸ் 2008 தொடக்கம் மூன்று யுத்தங்களை சந்தித்துள்ளது.
2006 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஹமாஸ், அடுத்த ஆண்டு காசாவில் இருந்து ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் பலஸ்தீன அதிகார சபையை வெளியேற்றியது தொடக்கம் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மறுபுறம் பலஸ்தீன அதிகார சபை மேற்குக் கரையை தளமாகக் கொண்டு போட்டி அரசொன்றை அமைத்தது.
இந்நிலையில் யஹ்யா சின்வாரின் தேர்வு ஹமாஸ் அமைப்புக்குள் அதன் அரசியல் பிரிவை தாண்டி அயுதப் பிரிவின் அதிகாரம் வலுப்பதை காட்டுவதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் சின்வாரின் தேர்வு “ஒரு தீவிரவாதியில் இருந்து மற்றோருவர்” என்பதற்கு அப்பால் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு சின்வாரை, ஹமாஸ் அமைப்பின் கடும்போக்கு முகாமின் தலைவர் என்று அடையாளமிட்டுள்ளது.
சின்வார் ஆறு ஆண்டுகளுக்கு முன் சிறையில் இருந்து விடுதலையானது தொடக்கம் ஹமாஸ் ஆயுதப் பிரிவான இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் படையின் சிரேஷ் தலைவர்களில் ஒருவராக செயற்பட்டு வருபவராவார்.
2015 இல் மேலும் இரு கஸ்ஸாம் உறுப்பினர்களுடன் அமெரிக்க தீவிரவாதிகள் பட்டியலில் சின்வாரின் பெயரும் இடம்பெற்றது.
கான் யூனிஸ் அகதி முகாமில் 1962இல் பிறந்த சின்வார் அரபு மொழித் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர் என்பதோடு ஹமாஸ் உளவுப் பிரிவுகளில் ஒன்றான ‘மாஜித்’ பிரிவின் நிறுவனர் ஆவார்.
தீவிரவாத நடவடிக்கைகளுக்காக 1988இல் இஸ்ரேலால் கைது செய்யப்பட்ட சின்வாருக்கு நான்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன.
சின்வாரின் நியமனம் இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு இடையில் மற்றொரு மோதலுக்கு வழிவகுக்கும் என்று இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடும்போக்கு வலதுசாரியான அவிக்டோர் லிபர்மான் கடந்த ஆண்டு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சராக நிகமிக்கப்பட்டிருந்தார். அவரது நியமனத்திற்கு பின்னர் மற்றொரு காசா யுத்தம் பற்றி எச்சரித்திருந்தார். அவ்வாறானதொரு யுத்தம் காசாவை முற்றாக அழித்து விடுவதாக இருக்கும் என்று கூறினார்.
கடைசியாக 2014இல் இடம்பெற்ற மோதலில் 2,251 பலஸ்தீனர்களும் 74 இஸ்ரேலியரும் கொல்லப்பட்டனர். ஹமாஸ் அமைப்பு ஆயுத பலத்தை பெறுவதை தடுக்கவெனக் கூறி காசா மீது இஸ்ரேல் முற்றுகையை கடைப்பிடித்து வருகிறது. எனினும் இந்த நடவடிக்கை கூட்டுத் தண்டனை முறை என்று குற்றம்சாட்டியுள்ளது.
We Muslims should know that the Zionist cannot be Trusted! Hence no Peace with them.
ReplyDeleteTheir Goal is to Achieve the " Promissd Land" which has the boarder as far Iran and Iraq.
The Zionist Plan is dismantle the MiddleEast first and expand their (Israels) boarder.
Brexit , Israeli Raised Geert Wilders threading to withdraw from EU, all these points out the Zionists next step, which is to destabilize the EU, then America, which is also in the process and become worlds Super Power.
Really!! Israel scared 😳 on him. Please give me a brack.
ReplyDeleteஇஸ்ரவேல் நடுங்குதா? குளிர் கால கூதல் அதிகம போலும்
ReplyDelete