தேசத் துரோகிகளை, தேசிய வீரர்களாக்க குழு
ஐரோப்பியர்கள் இலங்கையை கையகப்படுத்தி ஆட்சி செய்த காலத்தில், தேசத் துரோகிகளாக பெயர் குறிப்பிடப்பட்டவர்களை, தேசிய வீரர்களாக பரிந்துரை செய்ய ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவானது நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவினால் இன்று -09- நியமிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உருவாக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவானது, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய நியமிக்கப்பட்டுள்ளதுடன், இதன் தலைவராக பேராசிரியர் மாலனி அந்தகம நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த குழுவில், பேராசிரியர் கே.என்.ஓ தர்மதாஸ, களனி பல்கலைக்கழக தொல்பொருள் கல்வித் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அனுர மணதுங்க, சிறைச்சாலைகள் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் நாயகம் கே.டி. விமலரத்ன ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment