Header Ads



ஈரானை அவதானிக்கிறது அமெரிக்கா

ஏவுகணை சோதனை மேற்கொண்ட ஈரான், “பாதகமான நடவடிக்கையில்” ஈடுபடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் பிளைன் குற்றம்சாட்டினார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட பிளைன், ஈரான் மீதான குற்றச்சாட்டு குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. “இன்று தொடக்கம் ஈரான் அவதானிக்கப்படும் பட்டியலில் இருக்கும்” என்று பிளைன் கூறினார்.

ஈரானின் செயல்களைக் கண்டு அமெரிக்க ஒன்றும் செய்யாமல் இருக்காது என்று அவர் தெரிவித்தார். ஈரானுக்கு அமெரிக்கா ஏதேனும் கடிதம் அனுப்பியுள்ளதாக என்ற கேள்விக்கு பதிலளிக்க பிளைன் மறுத்தார்.

ஈரானின் ஏவுகணை சோதனை முற்றாக ஏற்க முடியாதது என்று அமெரிக்க அரசு முன்னர் குறிப்பிட்டிருந்தது.

ஏவுகணை சோதனை மேற்கொண்டதை கடந்த வார இறுதியில் ஒப்புக் கொண்ட ஈரான், அது ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானத்தை மீறியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரித்தது. தனது தற்காப்பு விவகாரங்களில் தலையிட வெளிநாடுகளுக்கு அனுமதி இல்லை என்று ஈரானின் பாதுகாப்பு அமைச்சு கூறியது.

எனினும் ஈரான் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து பிளைன் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. 

No comments

Powered by Blogger.