Header Ads



மரண தண்டனைக், கைதியுடன் மஹிந்த

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நலம் விசாரிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் மாலை 4 மணியில் இருந்து 4.30 மணி வரை அவர் அங்கு நேரம் செலவிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

மரண தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னர் இரண்டு வாரங்களில் நோய் வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துமிந்த சில்வா விடுதலைக்காக தற்போது வரையில் மேன்முறையீடு செய்துள்ளார்.

துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பார்வையிட சென்ற போதிலும், மஹிந்த செல்வது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.