Header Ads



தவிசாளர் பதவி, திருகோணமலைக்கு வேண்டும்

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களால் தராசுச் சின்னத்தில் ஆரம்பிக்கப்பட்ட அந்த காலம் தொடுத்து , இன்று மிகப் பெரிய மரமாக விசுவரூப வளர்ச்சி அடைந்த இந்தக் காலம் வரை, பல தியாகங்களும், போராளிகளின் உதிரங்களும் உரமாகிக் கிடக்கிறது.

அந்த தியாக வரலாற்றின் கனிசமான பங்களிப்பும், கட்சியை முழு நாட்டு மக்களும் திரும்பிப் பார்க்க வைத்த முதல் மாகாண சபைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை முஸ்லிம் காங்கிரசுக்கு அளித்து கட்சிக்கு நம்பிக்கையையும், புது உத்வேகத்தையும் வழங்கியது திருகோணமலை மாவட்டமே என்றால் மிகையாகாது.

வரலாற்றில் பல தலைவர்கள் வந்தார்கள் ,இருந்தார்கள், போனார்கள், இதில் பலர்  சுயநல அரசியலுக்காக கட்சியை பகடைக்  காயாக பாவித்ததை    கண்டுள்ளோம், 

ஆனால் தலைவர் ரவூப் ஹகீம் போலவே, கட்சி எந்த நிலையில் இருந்தபோதும் கட்சிக்கும் தலைமைக்கும் இம்மியளவும் பிசகாது விசுவாசமாக இருக்கும் ஒரே மகன் நமது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் M.S.தௌபீக் அவர்கள் மட்டுமே என்றால் யாராளும் மறுக்க முடியாது.

இன்று இந்தக் கட்சிக்கு பொருத்தமான ஒரு தவிசாளர் தேவைப்படுகிறது, அது கிழக்கு மாகாணத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது, இதுவரை எந்த பெரிய கட்சியும் இது போன்ற கட்சியின் பொருப்பான உயர் பதவியை திருகோணமலை மாவட்டத்துக்கு வழங்கியதும் இல்லை, இந்த திருகோணமலை மாவட்டமும் கிழக்கு மாகாணத்தின் தலைநகரமே என்பதை பலரும் நினைப்பதும் இல்லை.

நாம் இப்போது கௌரவ தலைவர் ரவூப் ஹகீம்  அமைச்சர்  அவர்களிடம் விநயமாகவும், பணிவன்புடனும் முன் வைக்கும் கோரிக்கை எமது சகோதரர் M.S.தௌபீக் MP அவர்களை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளராக முன் மொழியுங்கள், எமது மக்களுக்கு அந்த கௌரவத்தை தாருங்கள்  என்பதாகும்.

யூசுப்

4 comments:

  1. ஒரு பிரச்சினையை ஓரங்கட்டினால்; மறுபடியும் ஒரு பிரச்சினையா? "ஒரு தலைமைத்துவத்தைக் காக்க எவ்வளவு போராட வேண்டியுள்ளது!"
    மக்களும் திருந்திய பாடில்லை; தலைவர்களும் மார்க்க அறிவு, ஆளுமை, வினைத்திறன் மற்றும் சமுதாய பற்று இல்லாதவர்களாகவும் உள்ளனர். என்று பிரதேச வாதங்களை விடுத்து இவ்விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறோமோ, அன்றுதான் நமது சமுதாயத்துக்கு விடிவு.
    குறிப்பு:
    1 . நிலைத்து நிற்கும் தன்மையுடன் மேலுள்ள விடயங்களை பற்றி பேசுங்கள். தகுதி இருந்தால் நாமும் சேர்ந்து குரல் கொடுக்கிறோம்.
    2 . கையாலாகாத சிலர் பதவிக்காகவும், இன்னும் சிலர் தமது 'பிரதேச வாதத்தை' மறைக்கவும் பிரதேச வாதத்துக்கெதிரான கோஷத்தைக் கையிலெடுப்பது வேறொரு விடயம். அதற்காக 'பிரதேசவாதத்தை' அனுமதிக்க முடியாது.

    ReplyDelete
  2. They were unable to elect one MP in Trincomalee (Thowfeek is National List MP).

    ReplyDelete
  3. யூசூப் அவர்களே, உங்களுக்கான பதிலை Thunder BirdA மிகவும் நாகரிகமாக அழகாக சொல்லியுள்ளார். திருந்திக் கொள்ளுங்கள். கூலிக்கு மாரடிக்கும் உம்மை போன்றவர்கள் இந்த சமூகத்தின் மாபெரும் சாபக்கேடு. இருந்தாலும் நாங்கள் Jaffnamuslim இடம் கேட்டுக்கொள்ளுவது என்ன வென்றால் இந்த ஊர்வாதம், பிரதேச வாதம், பேசுபவர்களின் பதிவுகளை தயவு செய்து பிரசுரிக்க வேண்டாம். தலைவரின் திருகு தாளங்களில் ஓன்று தான் இந்த தேசியப்பட்டியல் எம்பி பதவியை சகோதரர் தெளபீக்குக்கு கொடுத்தது. தேர்தல் கேட்டு பெரும்பாண்மை மக்களால் நிராகரிக்கப்பட்டவருக்கு மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது. எம்பியாக இருந்து கொண்டே வெற்றி பெறமுடியாதவர், எப்படி கட்சியை வளக்கப் போகிறார். அப்படித்தான் கொடுக்க வேண்டுமானாலும் அதை அந்த மாவட்டத்தில் உள்ள வேறு ஒருவருக்கு கொடுத்திருக்க வேண்டும்.

    ReplyDelete
  4. யூசூப் அவர்களே, உங்களுக்கான பதிலை Thunder BirdA மிகவும் நாகரிகமாக அழகாக சொல்லியுள்ளார். திருந்திக் கொள்ளுங்கள். கூலிக்கு மாரடிக்கும் உம்மை போன்றவர்கள் இந்த சமூகத்தின் மாபெரும் சாபக்கேடு. இருந்தாலும் நாங்கள் Jaffnamuslim இடம் கேட்டுக்கொள்ளுவது என்ன வென்றால் இந்த ஊர்வாதம், பிரதேச வாதம், பேசுபவர்களின் பதிவுகளை தயவு செய்து பிரசுரிக்க வேண்டாம். தலைவரின் திருகு தாளங்களில் ஓன்று தான் இந்த தேசியப்பட்டியல் எம்பி பதவியை சகோதரர் தெளபீக்குக்கு கொடுத்தது. தேர்தல் கேட்டு பெரும்பாண்மை மக்களால் நிராகரிக்கப்பட்டவருக்கு மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது. எம்பியாக இருந்து கொண்டே வெற்றி பெறமுடியாதவர், எப்படி கட்சியை வளக்கப் போகிறார். அப்படித்தான் கொடுக்க வேண்டுமானாலும் அதை அந்த மாவட்டத்தில் உள்ள வேறு ஒருவருக்கு கொடுத்திருக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.