Header Ads



நாட்டுப்பற்­றினை வளர்க்க, பள்­ளி­வா­சல்கள் பங்­க­ளிக்க வேண்டும் - ஹலீம்

இலங்கை எமது தாய் நாடு என்ற உணர்வு முஸ்­லிம்­க­ளுக்கு இருக்க வேண்டும். இந்த உணர்வே எமது உரி­மை­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கு உறு­து­ணை­யாக இருக்கும் என முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார். 

இலங்­கையின் 69 ஆவது சுதந்­திர தினத்தை முன்­னிட்டு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளமும் கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிர்­வா­கமும் இணைந்து நடத்­திய சமய கலா­சார நிகழ்­வு­க­ளுக்குத் தலைமை வகித்து உரை நிகழ்த்­து­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். 

அமைச்சர் ஹலீம் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;

பள்­ளி­வா­சல்கள் முஸ்­லிம்கள் மத்­தியில் நாட்டுப் பற்­றினை வளர்ப்­ப­தற்கு தங்­க­ளது பங்­க­ளிப்­பினை வழங்க வேண்டும். சுதந்­திர தினத்தை முன்­னிட்டு பள்­ளி­வா­சல்­களில் இலங்­கையின் தேசியக் கொடி­யினை ஏற்­று­மாறும் பிர­தேச கிராம சேவகர் மற்றும் பொலிஸ் அதி­கா­ரிகள் கலந்து கொள்ளும் நிகழ்­வு­களை ஏற்­பாடு செய்து இன நல்­லி­ணக்­கத்­தையும் நாட்டுப் பற்­றி­னையும் வளர்ப்­ப­தற்கு உத­வு­மாறும் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் கோரி­யி­ருந்­தது. அநேக பள்­ளி­வா­சல்­களில் இவ்­வா­றான நிகழ்­வுகள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தன. 

இலங்­கைக்கு சுதந்­தி­ரத்தைப் பெற்றுக் கொடுப்­ப­தற்கு பெரும்­பான்மை சமூ­கத்­துடன் இணைந்து எமது முஸ்லிம் தலை­வர்­களும் பெரும்­பங்­காற்­றி­யி­ருக்­கி­றார்கள். அன்­றி­லி­ருந்தே முஸ்­லிம்கள் தமது நாட்டுப் பற்­றினை உறுதி செய்­தி­ருக்­கி­றார்கள். எனவே முஸ்­லிம்களாகிய நாம் நாட்டுப் பற்­றுள்­ள­வர்­க­ளாக இருக்க வேண்டும். இந்த உணர்வு நிச்­சயம் எமது உரி­மை­களைப் பெற்றுக்கொள்ள வாய்ப்­ப­ளிக்கும் என்றார். 

ARA.Fareel

1 comment:

  1. நாடு பூராவும் முஸ்லீம் பாடசாலைகளில் நானறிந்து நமது மாணவர்கள் நாட்டுப் பற்றுடன் தான் வளர்க்கப்படுகிறார்கள். அதேவேளை ஏனைய சமூகங்களுடன் நல்ல முறையில் பழகும் பண்பும் இஸ்லாத்துடன் சேர்ந்து நன்றாகவே பயிற்றுவிக்கப்படுகிறது. ஒருநாளில் அதுவும் "நாம் அடிமையாக இருந்தோம்" என்ற செய்தியை அடுத்த சந்ததிகளுக்கு மரபணுவாக்கம் செய்யும் "தேசிய தினத்தில்" மட்டும் தான் காட்ட வேண்டும் என்றில்லை. இதுவெல்லாம் ஆங்கிலேயர்களின் "அடிமைத்துவ" எச்சங்கள். நாம் 365 நாட்களிலும் சுதந்திரமான இலங்கையரே! இந்தக் கொண்டாட்டங்களை நிர்ப்பந்த அளவுடன் வைத்துக் கொள்வது தான் நாட்டுப் பற்றுக்கு அறிகுறி.

    ReplyDelete

Powered by Blogger.