கேட்கும்போதே மலைக்க வைக்கும் ஆராய்ச்சி
கூகுள் மேப் உதவியுடன் ஒரு தனி மனித உடலின் ஒவ்வோர் செல்லையும், அதற்குள்ளிருக்கும் அணுக்களையும் கண்காணிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.கேட்கும்போதே மலைக்க வைக்கும் இந்த ஆராய்ச்சி கடந்த 10 வருட காலமாக நடந்து வருகிறதாம். எதற்காக இத்தனை பெரிய மெனக்கெடல்?‘ஒருவரின் ஆரோக்கியம் மற்றும் நோயைத் தீர்மானிப்பது உடல் அணுக்களே.
உடலுக்குள்ளிருக்கும் டிரில்லியன் கணக்கான அணுக்களில் பாதிக்கப்பட்ட அணுவை துல்லியமாக ஒரு மருத்துவரால் அடையாளம் காண முடியாது. இவற்றில் எத்தனை விதமான அணுக்கள் இருக்கிறது? ஒன்றுக்கொன்று எவ்விதம் வேறுபடுகிறது என்று பிரித்தறிவதும் கடினம்.இந்த வரைபடம் மூலம் உடலின் உறுப்புகள் மற்றும் திசுக்களில் உள்ள அணுக்களை இனம்பிரித்து நோயின் தன்மையை அறிய முடியும். மாபெரும் இந்த முயற்சி மருத்துவ உலகில் ஒரு புரட்சியை உருவாக்கும்’ என்று விளக்கம் சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
they will never get the result
ReplyDelete