''உலக ஆசையினால் விழுங்கப்பட்ட, முஸ்லிம் தலைவர்கள்''
-M.JAWFER JP-
தற்போதைய இலங்கை முஸ்லிம்கள் அரசியல் அனாதைகள் மாத்திரம் இன்றி மத ரீதியிலும் ஓர் தெளிவற்ற நிலையாகவே உள்ளது. கடந்த காலங்களில் அரசியல் தலைமை ஓன்று இல்லாமல் வருவோரும் போவோரும் பின்னால் அலைந்து திரிந்த சமூதாயத்தின் தலை விதியை இரக்கமுடைய ரஹ்மான் அல்லாஹ் ஒன்றிணைத்து அஷ்ரப் என்ற மரத்தடியில் ஓன்று சேர வைத்தான். அதன் பிரதி பலனாக சிலபல உரிமைகளை அடையும் வாய்ப்பு கிடைத்தாலும், இறைவனின் சோதிப்பாக அந்த மரம் அரசியல் சூறாவளியால் சாய்த்தப்பப்பட்டது.
சாய்ந்து போன அதே மரம் வெளியிட்ட கிளைகள் குறிப்பிட்ட மரத்தில் இருந்துகொண்டே வேறு ஒரு இன விருத்தியை உருவாக்கிக்கொண்டு தாய் மரத்தோடு சேர்ந்து கம்பீரமாக நிற்க வேண்டிய கிளைகள் வாழை குட்டியை பிடிங்கி வேறு படுத்துவதுபோல் திட்டமிட்டு வேறுபடுத்தப்பட்ட காரணத்தால் சீர் செய்யப்பட்ட தலை விதி திசை மாறி செல்கிறது.
ஒரே ஒரு கட்சியாக உருவடுத்த நம் சமூதாயத்தின் கட்சி இன்று பல கட்சிகளாக பிரிந்து, மேலும் மனதை புண்படுத்தும் விதமாக பிரிந்த கட்சிகளுக்குள்ளும் பல பிரிவும் உருவாக்கப்பட்டுவிட்டது. பிரிந்து சென்றாலும் அமைதிகாப்பதும் இல்லை ஒருவரின் குறையை மற்றவர் அம்பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடும் காட்சி ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் அந்நிய மதத்தவர்கள் முன்னாள் முகம் திறந்து செல்ல முடியாத அளவுக்கு வெட்கி தலை குனியும் நிலைகள் உருவாக்கப்பட்டுவிட்டது.
பரம்பரை பரம்பரையாக பகைவர்களாக,மதுவில் மூழ்கிக்கிடந்த,ஒருமாதை பலர் புணர்ந்த,வட்டியில் நிலைத்து இருந்த,நரகத்தின் விளிம்பில் இருந்த ஒரு சமூதாயத்தை மனிதப்புனிதர்களாக மாற்றியமைத்த அல்குர்ஆனும் அருமை நபி(ஸல்) அவர்களின் வழிமுறைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட யாப்பின் பிரகாரம் செயற்படுகின்றோம் என்று சொல்லும் நமது கட்சிகளுக்கு ஏன் இந்த குர்ஆனும் நபி வழியும் நேர்வழி காட்டவில்லை? பதவி ஆசை, பண ஆசை,உலக ஆசை பராக்காக்கிவிட்டது.
ஈமான் கொண்டவர்களே!உங்கள் செல்வமும்,உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் சிந்தனையை விட்டும் உங்களை பராமுகமாக்கி விட வேண்டாம்.எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.63:09
தத்தமது வாதத்திறமையால் உலகில் மக்களை ஏமாற்றி வரும் நமது அரசியல்வாதிகள் நமது நாட்டில் ஏனைய மதத்தவர்களின் வழிமுறையில் அரசியல் மோசடியை செய்யும்பழக்கத்துக்கு பழகி விட்டார்கள் என்றுதான் கூற வேண்டும்.தெரியாமல் செய்தோம் என்று சொல்லும் அளவுக்கு நமது அரசியவாதிகளை சமூதாய புத்தி ஜீவிகள்,உலமாக்கள் இவர்களுக்கு காலத்துக்கு காலம் மார்க்க அடிப்படையில் ஆலோசனை வழங்கப்படாமல் விட்டதும் இல்லை. இவர்களின் உள்ளம் கடினமாகி விட்டது, இவர்களின் உள்ளத்தில் அல்லாஹ்வுடைய அச்சம் நீக்கப்பட்டு விட்டது, இவர்களை உலக ஆசை விழுங்கி விட்டது என்பதுதான் உண்மை.
(மூமின்களே) உங்களை திருப்திப்படுத்துவதற்காக உங்களிடத்தில் அவர்க்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள் அவர்கள் (உண்மையாகவே) மூமின்களாக இருந்தால்,அவர்கள் திருப்திப்படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும் அவன் ரசூலும்தான்.09:62.
ஏன் என்றால் வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அற்ரகுமானிடம் அடிமையாய் வருபவரே அன்றி வேறில்லை.19:94 கிKயாமத் நாளில் அவர்களில் ஒவ்வொருவரும் தனித்தனியாக அவனிடம் (அல்லாஹ்விடம்) வருவார்கள்.
ஆகவே நமது சமூதாய அரசியல் தலைவர்கள் மறுமை நாளில் அல்லாஹ்விடம் பொறுப்புக்கூறல் விடயத்தில் மிகக்கவனமாக இருந்தால் மட்டும் போதும் நமது சமூகம் நிம்மதியடையவும் உரிமைகளை பெற்றுக்கொள்ளவும் போதுமானதாக இருக்கும்.
Post a Comment