பல்கலைக்கழக முஸ்லிம், மாணவிகள் சீரழிகின்றனரா..?
முகநூலில் சில நாட்களாக "சீரழியும் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவிகள்" என்கிற ஒரு கட்டுரை வலம் வருவதைக் காணக்கிடைத்தது. இதொன்றும் புதிதல்ல. சீசனுக்கு சீசன் வயலுக்குத் தெளிக்கின்ற கிருமிநாசினிகள் போல அடிக்கடி முகநூலில் அள்ளி வீசப்படுபவைகள் தான். வழக்கம் போல இவற்றை கடந்து சென்று விட்டேன். ஆனால் ஒருகட்டத்தில் அக்கட்டுரையின் தாக்கமும் அதற்கான மறுப்புக்கட்டுரைகளின் நடுநிலையற்ற தன்மையும் இதைப்பற்றி எழுதத் தூண்டியது. எனவே ஒரு பல்கலைக்கழக மாணவனாக இதைப்பற்றி எழுதக் கடமைப்பட்டிருக்கிறேன்.
சுருக்கமாக இதனை எழுத நினைப்பதால் நேரடியாக விடயத்திற்கு வருகிறேன். பல்கலைக்கழக மாணவிகள் தொடர்பாக ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் அதை பல்கலைக்கழக மாணவர்களிடத்தில் பேச வேண்டும் அல்லது பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸிடம் புகாரளிக்க வேண்டும். அதைவிட்டு முகநூலில் விவாதிப்பது என்பது மிகப்பிழையான ஒரு விடயம். இது எந்தத் தவறும் செய்யாத பெரும்பாலான மாணவிகள் குறித்து ஒரு தவறான விம்பம் தோற்றுவிக்கப்பட ஏதுவாக அமைந்துவிடும்.
பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்பார்கள். ஆனால் இங்கே நாரோடு சேர்ந்து பூவும் நாறுகின்ற கதையல்லவா நடக்கிறது. இங்கே தவறு செய்வது 5 சதவீதமான மாணவிகள் தான். ஆனால் அவற்றை சமூகவலைத்தளங்களில் பதியும் போது பாதிக்கப்படுவது எந்தத் தவறும் செய்யாத ஏனைய 95 சதவீதமான மாணவிகளும் சேர்த்துத் தான்.
முகநூலில் சில பல்கலைக்கழக மாணவிகள், முஸ்லிம் மாணவிகளைப் பற்றி விமர்சித்து எழுதப்பட்ட அந்தக் கட்டுரைக்கு சிறப்பான பதில் கட்டுரைகளை எழுதியிருந்தார்கள். அவர்களைப் பாராட்டுகிறோம். மேலும் மேலும் தாங்கள் தரப்பு நியாயங்களை அழுத்திக் கூறும்படி ஊக்கப்படுத்துகிறோம்.
மேலும் ஒரு மறுப்புக் கட்டுரையொன்றை வட்சாப்பில் வாசிக்கக் கிடைத்தது. அதுவும் ஒரு பல்கலைக்கழக மாணவியாலே எழுதப்பட்டிருந்தது. அருமையான பதிவு. புள்ளிவிபரங்களுடன் சிறப்பாக மாணவிகள் தரப்பிலிருந்து பதிலளித்திருந்தார். ஆனால் அதில் "இங்கே எந்தவிதமான ஒழுக்கமீறல்களும் இல்லை" என்று பீங்கானால் அண்டாவை மறைக்கும் வேலையைச் செய்தது மட்டுமல்லாமல் "அப்படியே ஒழுக்க மீறல்கள் இருந்தாலும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் அப்படி நடக்க விட்டுவிடமாட்டார்கள்" என்று காதில் பூ சுற்றுகிற வேலையையும் சேர்த்தே செய்திருந்தார்.
பல்கலைக்கழகங்களில் அதிகமான சுதந்திரம் இருக்கிறது என்பதும், பாடசாலைகளைப் போல் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள் மாணவர்களைக் கண்காணிப்பதில்லை என்பதும் பாமர மக்களுக்கும் தெரிந்த விடயம். எனவே இவ்வாறான பூசி மழுப்புதல்களும் நடுநிலையற்ற வக்காலத்து வாங்கல்களும் இப்பிரச்சினையை மேலும் உக்கிரமடையச் செய்யுமே தவிர குறைக்காது. ஏனென்றால் "இங்கே எந்தத் தவறும் நடைபெறுவதில்லையென்றா கூறுகிறீர்கள். பொறுங்கள், எங்களிடம் 50 ஆதாரங்கள் இருக்கின்றன, 100 ஆதாரங்கள் இருக்கின்றன. நாங்கள் அவற்றை முகநூலில் பதிந்து நிரூபித்துக் காட்டுகிறோம்" என்று சில உஷார் மடையர்களின் சலசலப்புகளை ஆங்காங்கே காணக்கிடைத்து. எனவே மறுப்பு எழுதும் சகோதரிகள் இவைகளையும் கவனத்திற் கொள்ளுங்கள்.
நிற்க..
பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் மாணவிகள் சிலரின் மாற்று மதத்தவர்களுடான காதல் கன்றாவி எபிசோடுகள் ஓடத்தான் செய்கின்றன. அவற்றை யாரும் மறுப்பதற்கில்லை. அது விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவு மிகச் சொற்பமே. "யுனிவெர்சிட்டினா அப்டித்தான். இதெல்லாம் பெருசா கண்டுகொள்ளக் கூடாது" என்று நாக்கைத் தட்டிவிட்டுச் சென்றுவிடாது, அவைகளை பல்கலைக்கழக மட்டத்தில் பேசி அவைகளைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதனூடாகவோ அல்லது குறித்த மாணவர்களின் பெற்றோருக்கு அறிவிப்பதனூடாகவோ தடுக்க முயற்சிக்க வேண்டுமே தவிர முகநூலில் பதிந்து, எந்தத் தவறும் செய்யாத ஆயிரக்கணக்கான அப்பாவி மாணவிகளின் கல்விக்குப் பங்கம் விளைவிக்கக்கூடாது. அவைகளை முஸ்லிம் மஜ்லிஸ்கள் கண்காணித்துக் கொண்டு தான் இருக்கின்றன.
எனவே யாராவது அவ்வாறானதொரு பிரச்சனையைக் கேள்விப்பட்டாலோ அல்லது நேரடியாகக் கண்டாலோ அதை உரியவர்களின் பெற்றோர்களின் கவனத்திற்கு அல்லது முஸ்லிம் மஜ்லிஸ்களின் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள்.
என்னைப் பொருத்தவரை இந்த நாட்டில் முஸ்லிம்களுடைய கல்வியின் முதுகெலும்பு முஸ்லிம் பெண்கள் தான். உதாரணமாக எங்களுடைய பெட்சில் 350 முஸ்லிம் மாணவிகள் 34 முஸ்லிம் ஆண் மாணவர்கள். இது தான் எல்லா உயர்கல்வி நிலையங்களிலும் உள்ள நிலைமை. எனவே மாணவிகளைப் பற்றி கட்டுரை எழுதுபவர்களுக்கு கூறிக்கொள்வது இது தான்; மாணவிகளுடைய கல்வி நடவடிக்கைகளுக்கு உதவி செய்யுங்கள், ஊக்கப்படுத்துங்கள் அல்லது உபத்திரவம் செய்யாது விலகி நில்லுங்கள். அதுவே நீங்கள் செய்யும் மிகபெரிய உதவியாக இருக்கும்.
-Mohamed Zakee-
-Computer Unit-
-South Eastern University Of Srilanka-
Super bro நடுநிலையாக எழுதி இருந்தீர்கள் (பல்கலைக்கழக மாணவனாக இருந்தும்)
ReplyDeleteSuper bro நடுநிலையாக எழுதி இருந்தீர்கள் (பல்கலைக்கழக மாணவனாக இருந்தும்)
ReplyDeleteValthukkal sako! But 5% dhan pily seikinrarkal enpadhu mika mika poiyana karuthu nootrukku 50% enru sonnalum adhuvum kuraivudhan. Palkalykalakathil pailum ungalukku theriyadha vidayamumalla idhu. Nanry.
ReplyDeleteinnum sila nadkalil maanavikalin athara pukaippadankal varalam
ReplyDelete