சத்திர சிகிச்சை தொடர்பில் புதிய விதி - சுகாதார அமைச்சு அறிவிப்பு
சத்திரசிகிச்சைக்கு உட்படுத்திய நோயாளி ஆபத்தான கட்டத்திலிருந்து மீளும் வரை, சத்திரசிகிச்சை மேற்கொண்ட சத்திரசிகிச்சை நிபுணர் அந் நோயாளிக்கு அருகிலேயே இருக்க வேண்டுமென புதிய ஒழுங்குவிதி ஒன்றை அமுலாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பெரும்பாலான தனியார் வைத்தியசாலைகளில், சத்திரசிகிச்சை மேற்கொண்ட உடனேயே சத்திர சிகிச்சை நிபுணர்கள் வேறு பணிகளின் நிமித்தம் அங்கிருந்து புறப்பட்டுச் செல்கின்றனர்.
இதன்போது சத்திரசிகிச்சையின் பின்னர் நோயாளிக்கு ஏற்படத்தக்க உயிராபத்துக்களை குறைத்துக் கொள்வதனை இதன்மூலம் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒழுங்குவிதி முறையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதனை கண்டறிந்ததன் பின்னர் விளக்கமளிக்கும் குழு ஒன்றினை ஈடுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஒழுங்குவிதியின் காரணமாக, தனியார் வைத்திய சாலைகளில் சத்திர சிகிச்சைக்காக செலுத்தப்படும் கட்டணத்துக்குரிய முழுமையான, திருப்திகரமான சேவையினை நோயாளிகள் பெற்றுகொள்வதற்கு வழியமைக்குமென எதிர்பார்ப்பதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
Post a Comment