அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டிய, அவசியம் இல்லை - நாமல்
சமகால அரசாங்கம் தொடர்பில் தற்போது வரையில் அதிக அவதானத்துடன் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தை தாம் கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், போகிற போக்கை பார்த்தால் அரசாங்கமே அரசாங்கத்தை கவிழ்த்து விடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிபிசி சிங்கள சேவையுடன் இடம்பெற்ற நேரலை கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நாமல் இவ்வாறு கூறியுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க, சுஜீவ சேனசிங்க, ஹரின் பெர்ணான்டோ போன்றோர் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு பாரிய நடவடிக்கைகளை கிராமங்களின் ஊடாக மேற்கொண்டனர்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்த இரண்டு வருடங்களாக மக்களுக்கு ஒன்றும் செய்யாமல், மஹிந்த ராஜபக்சவின் மோசடிகளை கண்டுபிடிப்பதாகவும், திருடர்களை கைது செய்வதாகவும் கூறி வருகின்றனர்.
போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தி சேறு பூசுகின்றார்கள். என் மீதும் இன்றைய தினம் பணம் தூய்மையாக்கல் குற்றச்சாட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் காலங்களில் வழங்கிய ஒரு வாக்குறுதியையும் இந்த அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியவில்லை.
அண்மைக்காலங்களில் 18 பில்லியன் டொலர் மோசடி செய்ததாக அமைச்சர் ராஜித கூறினார். தற்போது அதனை சந்திரிக்கா 1 பில்லியனாக மாற்றியுள்ளார்.
சீன தூதுவர் அவரிடம் மஹிந்த தரகு பெற்றதாக கூறியுள்ளார். நாட்டின் முன்னாள் தலைவர் ஒருவர் வேறு நாட்டின் தூதுவர்கள் குறித்து போலி தகவல் வெளியிடாமல் பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும்.
நுட்பமாக நாங்கள் மோசடி செய்துள்ளதாக மங்கள கூறுகின்றார். அப்படி என்றால் மத்திய வங்கி மோசடி நிரூபிக்கபப்பட்ட ஒன்று. அதற்காக குற்றவாளிகளை ஏன் கைது செய்யவில்லை?
இரகசியமாக நாங்கள் மேற்கொண்டதாக கூறப்பட்ட மோசடிகளை கண்டுபிடிப்பதற்கு செலவிடும் பணத்தை இந்த விசாரணைகளுக்கு பயன்படுத்தலாமே. அனைத்து விடயங்களும் போலியானவை.
நாங்கள் 20 டொலர் பில்லியனை நாட்டில் இருந்து கொண்டு சென்றுள்ளோம் என்றால் அதனை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை.
அப்படி நாங்கள் திருடியிருந்தால் அதனை கண்டுபிடிக்காமல் அவர்களுக்கு பிரச்சினையாக இருப்பவர்களை கண்டுபிடித்து கைது செய்கின்றார்.
முதலாவதாக புலனாய்வு பிரிவு அதிகாரிகளை கைது செய்தார்கள் பின்னர் பிக்கு மற்றும் எனது சகோதரர்களை கைது செய்தார்கள்.
இங்கு முற்றிலும் சேறு பூசும் நடவடிக்கைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுகின்றது. பொதுவான ஒரு நபரின் காணியை காட்டி அது ராஜபக்சர்களின் காணி என்று போலியாக கூறுகின்றார்கள்.
இன்று அரிசி விலை குறித்து அரசாங்கம் பேசுவதில்லை. நாட்டின் தலைவர் கிராமத்தை சேர்ந்தவர் அரிசி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.
அரசாங்கத்தின் குற்றச்சாட்டுகளை மறைக்க அரசாங்கம் எங்கள் மீது குற்றச்சாட்டுகளை திணிக்கின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment