Header Ads



கொள்ளுப்பிட்டி உணவகத்தில், உயிருடன் இறால்கள்

கொள்­ளுப்­பிட்­டியில் சீன உண­வகம் ஒன்றில் வைக்­கப்­பட்­டி­ருந்த ஒரு தொகை உயி­ருள்ள இறால்­களை கைப்­பற்­றி­யுள்­ள­தாக கடற்­றொழில் மற்றும் நீரியல் வள அபி­வி­ருத்தி அமைச்சின் விசா­ரணைப் பிரி­வினர் தெரி­விக்­கின்­றனர்.

அத்­துடன் கட­லட்­டை­களும் இதன்­போது கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­துடன் குறித்த சீன உண­வ­கத்­துக்கு எதி­ராக வழக்கு தொட­ர­வுள்­ள­தா­கவும் அவர்கள் தெரி­வித்­துள்­ளனர். 

இறால்­களின் இனப்­பெ­ருக்க கால­மான பெப்­ர­வரி மற்றும் ஒக்­டோபர் மாதங்­களில் இறால்­களை பிடித்தல், வைத்­தி­ருத்தல், கொண்­டு­செல்லல் மற்றும் விற்­பனை செய்தல் ஆகி­யன கடற்­றொழில் மற்றும் நீரியல் வள சட்டத்துக்கமைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

(ரெ. கிறிஸ்­ண­காந்)

No comments

Powered by Blogger.