துருக்கியுடன் இணைந்து செயல்பட, டிரம்ப் முடிவு
ஐஎஸ் தீவிரவாதிகளை அழிப்பதில் துருக்கியுடன் அமெரிக்க அரசு இணைந்து செயல்படும் என்று டிரம்ப் துருக்கி அரசுக்கு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் 45 வது ஜனாதிபதியான டிரம்ப் தினந்தோறும் ஏதேனும் ஒரு அறிவிப்புகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். அதில் பெரிதும் சர்சையை கிளப்பியது, இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட 7 நாட்டு குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வரக் கூடாது என்று அறிவித்தது தான்.
இந்நிலையில் துருக்கி ஜனாதிபதி Tayyip Erdogan மற்றும் அமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப் இருவரும் நாட்டின் நிலவரங்கள் மற்றும் பாதுகாப்புகள் குறித்து தொலைப் பேசியில் உரையாடிக் கொண்டதாக கூறப்படுகிறது.
அதில் துருக்கி தரப்பில் பயங்கரவாததிற்கு எதிரான போராட்டம் மற்றும் சிரியாவில் இருந்து இடம் பெயர்ந்த பொதுமக்கள் ஆகியோர் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் ஈரான் நாட்டில் தற்போது சக்தி வாய்ந்த புரட்சிகள் ஏற்படுவதாகவும், இது மிகப்பெரிய பிரிவிற்கு வழிவகுக்கும் என்று டிரம்பிடம் பரிசீலித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் தீவிரவாதிகளுக்கு எதிராக போராட வேண்டும் என்று கூறியதாகவும், இதற்கு டிரம்ப் தரப்பில் இருந்து சாதகமான முடிவு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment