அல்லாஹ் அனைத்தையும் பார்க்கிறான், ஆவலுடன் காத்திருக்கிறேன் - பஷீர்
-விடிவெள்ளி-
ஒழுக்காற்று நடவடிக்கை குழுவின் முன்னிலையில் எனது வாக்குமூலத்தை வழங்குவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
ஒழுக்காற்று நடவடிக்கை குழுவின் முன்னிலையில் எனது வாக்குமூலத்தை வழங்குவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பதவியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பதவியிலிருந்து என்னை இடை நிறுத்தியுள்ளதாக இதுவரை உத்தியோக பூர்வமாக கட்சியின் செயலாளரிடமிருந்து கடிதம் கிடைக்கவில்லை.
கடிதம் எப்போது கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் அன்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத்திடம் அவரது எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் வினவிய போதே இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
இடைநிறுத்தக் கடிதம் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டதும், கட்சியின் யாப்பின்படி ஒழுக்காற்று நடவடிக்கை குழு என்னை விசாரணைக்கு அழைக்க வேண்டும்.
ஒழுக்காற்று நடவடிக்கை குழுவின் முன்னிலையில் எனது வாக்குமூலத்தை வழங்குவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். அந்தக் கடிதமும் எனக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படவேண்டும்.
நான் எனது மக்கள் மீதே நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவர்களே எனக்குத் தீர்ப்பு வழங்க வேண்டும். அல்லாஹ் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றார்.
உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால்
ReplyDeleteஅதை இறைவனிடம் விட்டு விடுங்கள்.
மாறாக காட்ச்சியை, சமூகத்தை
குழப்ப வேண்டாம் வேண்டாம்.
தலைமையை விமர்சிப்பவன் ,
அதற்கு கட்டுப்படாதவன் யாருடையா
கூட்டாளி ? என்பதை நான் சொல்லி
நீங்கள் அறியத்தான் வேண்டுமா ...?
சென்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த இராஜபக்ஷ்யிற்கு ஒரு காதல்கடிதம் எழுதி உங்கள் ஆசைகளை அதில் வெளிப்படுத்தினீர்கள் அப்போதே மக்கள் நீங்கள் யாரென்று கண்டறிந்துள்ளார்கள் மீண்டும் மக்கள் பெயரில் ஆகயக்கோட்டை கட்டாதீர்கள்
ReplyDelete