Header Ads



கடல் அலையை பயன்படுத்தி மின்சார உற்பத்தி - இலங்கைக்கு வழங்க பின்லாந்தும் விருப்பம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையால் தற்போது மின்சார பிரச்சினையே அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.

இதனை கட்டுப்படுத்த வீடுகளுக்கு சூரிய மின் கலன் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் முடிவு செய்திருந்தது.

ஆனால் தற்போது கடல் அலையை பயன்படுத்தி மின்சார உற்பத்தியை மேற்கொள்வதற்கு இலங்கைக்கு பின்லாந்து ஆதரவு வழங்க முன்வந்துள்ளது.

மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் பின்லாந்தின் இலங்கைக்கான தூதுவருக்கிடையிலான சந்திப்பின் போது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது உள்ள நவீன தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி குறைந்த செலவில் இந்த திட்டத்தை மேற்கொள்ள முடியும் என்றும், இதனை இலங்கைக்கு வழங்குவதற்கு பின்லாந்தும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.