Header Ads



''இளம் தலைமுறையினர் இவரைப் பார்த்து, பாடம் படிக்க வேண்டும்''


-அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி-

நேற்று (12/02/2017) மத்ரஸா மாணவர்கள், பெற்றோர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி ஒன்றுக்காக கொழும்பு , வத்தளை பகுதியில் உள்ள மத்ரஸா ஒன்றுக்கு சென்றிருந்தேன். நிகழ்ச்சி முடிந்ததும் பகல் சாப்பாட்டுக்காக  ஹுனுபிடிய, வெலேகொட , காந்தி மாவத்தையில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். 

அந்த வீட்டினுள் நுழைந்து  போது என் கண்ணில்பட்ட முதியவரை பார்த்ததும் அவரோடு பேச வேண்டுமென்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது, உடன் பக்கத்திலிருந்த நமது நண்பர் ஒருவர் அவர் வயது எத்தனை தெரியுமா ? ஷேக் முபாரிஸ், என என்னிடம் கேட்டார்.  நான் தெரியாது என்று சொல்லிவிட்டேன். அப்போது அவர், அவருக்கு இப்போது  93 வயதாகிறது எனச் சொன்னார். அத்தோடு நானும் அவரோடு சிறிது நேரம் உரையாடலானேன். 

ஆம் அவரது பெயர் உமர் ஸாஹிப் அப்துல் காதர் ஆகும். இவருடைய சிறப்பம்சம் என்னவென்றால் தனது 93 வருட கால வாழ்க்கையில்  இதுவரை எந்த மருத்துவ மனைக்கும் அவர் சென்றதில்லை. மருந்து மாத்திரைகளோ ஊசிகளோ எதுவுமே பயன்படுத்தியது கிடையாது என்பதை அவரிடமிருந்து நான் கேட்டபோது எனக்கு ஏற்பட்ட ஆச்சரியத்துக்கு அளவே இல்லை, சுப்ஹானல்லாஹ். 

இந்த வயதிலும் உடுப்புக்கள் துவைப்பது முதற் கொண்டு தனது எல்லா வேலைகளையும் தன் கையாலே செய்து வருவது மட்டுமல்லாது பிறருடைய வேலைகளையும் தானே செய்து கொடுக்க வேண்டுமென்பதுவும் இவருடைய ஒரு ஆசை.

அவரது பக்கத்தில் அமர்ந்து அந்த புன்னியவானின் பிரார்த்தனைகளை எதிர்பார்த்தவனாக அவரோடு சேர்ந்து இந்த போடோவையும் எடுத்துப் பதிகிறேன்.

30, 40 வயதாகிவிட்டாலே சுகர், கொலஸ்ட்ரோல், அல்ஸர், என பேக்கோடும் பைலோடும் மருத்துவமனையும் கையுமாகத் திரியும் எம் போன்ற இன்றைய இளம் தலைமுறையினர் இவரைப் பார்த்து பாடம் படிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு அவரிடமிருந்தும் அன்பான அவரது குடும்பத்தினரிடமிருந்தும் விடைபெற்றேன். 

2 comments:

  1. Emathu sakothararkalin athihamanavarkalin porulatharam vaddiyodu pinnipinainthathakum Allah enna solhiran "vaddiyai alippom enhiran"

    ReplyDelete
  2. What you expecting by publishing this?

    ReplyDelete

Powered by Blogger.