ரோஹின்யா முஸ்லிம்கள் மீது, கூட்டு பாலியல் வல்லுறவு
மியான்மாரில் உள்ள படையினர் பெரும் எண்ணிக்கையிலான வயது வந்தோர் மற்றும் குழந்தைகளை கொன்றிருப்பதாகவும், ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது திட்டமிட்ட கூட்டு பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளதாகவும் ஐ.நாவின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மானுட குலத்துக்கு எதிரான குற்றங்களாகவும் மற்றும் இன சுத்திகரிப்பாகவும் இந்த வன்செயல்கள் கருதப்படக்கூடியவை என்று ஐ.நா தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து மியான்மாரிலிருந்து அண்டை நாடான வங்கதேசத்திற்கு தப்பிச்சென்ற 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் 200க்கும் அதிகமானோரை ஐ.நா பேட்டி கண்டுள்ளது.
சிறுபான்மையினர் மீதான துன்புறுத்தலை முன்னர் மறுத்து வந்த மியன்மார் அரசு, தற்போது ஐ.நாவின் குற்றச்சாட்டுக்களை மிகவும் தீவிரமாக எடுத்து கொள்வதாக தெரிவித்துள்ளது.
Post a Comment