பள்ளிவாசல் விவகாரம், சம்பிக்கவின் திட்டத்திற்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு
தம்புள்ளை பள்ளிவாசலை புதிய இடமொன்றுக்கு மாற்றிக்கொள்வதற்கு பாரிய நகரம் மற்றும் மேற்கு பிராந்திய அமைச்சர் சம்பிக்க ரணவக்க 20 பேர்ச் காணியே வழங்க முடியும் எனத் தெரிவித்துள்ள நிலையில் பள்ளிவாசல் நிர்வாகம் அதற்கு மறுப்புத் தெரிவித்து 80 பேர்ச் காணி வழங்கப்பட வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தற்போது அமைந்திருக்கும் தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் அதன் கழிவறைகள் 41.49 பேர்ச் காணியில் அமைந்துள்ளன. எனவே வாகனத் தரிப்பிடத்துக்கும் சேர்த்து 80 பேர்ச் காணி வழங்கப்படவேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பள்ளிவாசல் நிர்வாகசபை உறுப்பினர்கள் 17 பேரும் கையொப்பமிட்டு ஏற்கனவே மகஜர் ஒன்றும் கையளித்துள்ளது.
நேற்று முன்தினம் பள்ளிவாசல் நிர்வாக சபை ஒன்றுகூடி இது தொடர்பில் கலந்துரையாடியது. மாத்தளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.இப்றாஹிமும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலை சூழ வாழும் 28 தமிழ், முஸ்லிம், சிங்கள குடும்பங்களுக்கு பள்ளிவாசலுக்கென ஒதுக்கப்படும் காணிக்கருகிலே காணிகள் வழங்கப்படவேண்டுமென பள்ளிவாசல் நிர்வாக சபை பிரதிநிதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுடனான பேச்சுவார்த்தையின் போது கோரிக்கை விடுத்த போதும் அமைச்சர் பள்ளிவாசல் காணியிலிருந்தும் சுமார் 300 மீட்டருக்கு அப்பாலே காணி வழங்க முடியும் எனத் தெரிவித்தார். நிர்வாக சபை அந்த குடும்பங்களுக்கு பள்ளிவாசல் காணிக்கருகிலே நிலம் வழங்கப்படவேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
பள்ளிவாசல் நிர்வாக சபையுடன் தான் மீண்டுமொரு கலந்துரையாடலை எதிர்வரும் திங்கட்கிழமை 20 ஆம் திகதி நடத்தவுள்ளதாகவும் அதன் பின்பு நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளையும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவையும் சந்திக்கவுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம். இப்றாஹிம் தெரிவித்தார்.
புதிதாகப் பள்ளிவாசலை நிர்மாணித்துக் கொள்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள காணிக்கருகில் தற்போது ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலுக்கருகில் குடியிருப்பவர்களை குடியமர்த்துவதன் மூலமே பள்ளிவாசலின் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ள முடியுமெனவும் அவர் கூறினார்.
ARA.Fareel
Asking 40 perches is acceptable, since the current masjid has 40 something perches.
ReplyDeleteIt will be unfair to ask 80 perches. Specially considering the situation we have.
The Buddhist already accuse us of land grabbing. So the wise thing will be to ask 40 perches and let Muslims contribute to the remaining 40 perches if the land is available.
If they ask 80 perches at least they might get more than 40 perches. Let anyone talk about land grabbing. Nobody can grab someone's land illegally in Sri Lanka. We must buy to own someone's land!
ReplyDelete