Header Ads



ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஏன் நஷ்டமடைந்தது - காரணம்கூறும் அமைச்சர்

நாட்டின் திறைசேரிக்கு வருமானத்தை ஈட்டிக்கொடுத்த ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதால் கடந்த காலத்தில் பெரியளவில் நஷ்டமடைந்ததாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு விமான நிறுவனம் ஒன்றுடன் இணைந்து சர்வதேச விமான சேவைகளை நடத்தியதன் மூலம் ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் நாட்டிற்கு பெருளவில் வருமானத்தை பெற்றுக்கொடுத்தது.

பின்னர் அந்த நிறுவனத்தை மைத்துனர்மயமாக்கியதால் நாட்டுக்கு சுமையாக மாறி நஷ்டத்தை ஈட்டிக்கொடுத்தது.

இதனால், ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியமைக்க உள்ளதாகவும் அமைச்சர் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

கண்டி கலகெதர அளுத்தெனிய மகா வித்தியாலத்தை தொழிற்நுட்ப கல்லூரியாக மாற்றுவது தொடர்பான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இவற்றை கூறியுள்ளார்.

விமான நிறுவனத்திற்கு ஒருதலைபட்சமாக நடந்த கொடுக்கல் வாங்கல்கள் காணமாக ஏற்பட்டுள்ள பெரிய நஷ்டத்தில் இருந்து அந்த நிறுவனத்தை எப்படி மீட்பது என்பது குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம்.

விமான நிறுவனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்படும்.

நாட்டுக்கு பெரும் சுமையாக இருக்கும் விமான நிறுவனத்தை இலாபம் ஈட்டும் நிலைமைக்கு கொண்டு வர வேண்டும். அரசாங்கம் அதற்காக துரித நடவடிக்கைகளை எடுக்கும்.

அது மாத்திரமல்ல மக்களுக்கு எதிர்காலத்தில் பல சலுகைகளை வழங்க நாம் நடவடிக்கை எடுப்போம்.

இதன்படி அடுத்த இரண்டு வாரங்களில் அரிசியின் விலையை குறைப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. நாடு அரிசி 65 முதல் 70 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.

மக்களுக்கு சலுகை விலையில் அரிசியை பெற்றுக்கொடுப்பதற்காகவே அரிசி இறக்குமதிக்கு வரிச் சலுகை வழங்கினோம். அரிசி விலையை குறைக்காத வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.