Header Ads



காதலர் தின கொண்டாட்டங்களுக்கு 'தடா'

பாகிஸ்தானில் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து இஸ்லாமாபாத் உயர்  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

காதலர் தினம் என்பது இஸ்லாமிய பண்பாட்டுக்கு எதிரானது என்று கூறி அதனை தடை செய்ய வேண்டுமென்று கோரிகை வைத்து இஸ்லாமிய அடைப்படை வாத அமைப்பு ஒன்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. 

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் பாகிஸ்தானில் பொது இடங்களில் காதலர் தினம் தொடர்பான கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து  உத்தரவு பிறப்பித்துள்ளது.  

இத்துடன் அந்நாட்டில் இயங்கும் அனைத்து விதமான ஊடங்களும் காதல் தினம் தொடர்பான எந்த விஷயங்களையம் விளம்பரப்படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தகவலை பாகிஸ்தானிலிருந்து வெளிவரும் டான் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

1 comment:

  1. May Allah Bless the effort of TRUE Muslim brothers who enlightened the government and handle the matter smoothly.

    I wish so called MODERATE Muslims will keep their mouth shut in this regard.

    ReplyDelete

Powered by Blogger.