Header Ads



புற்றுநோய் இல்லத்திற்காக கட்டாரில், சேகரிக்கப்பட்ட நிதி கையளிப்பு


ஏறாவூரில் அமையப் பெறவுள்ள EASTERN CANCER CARE CENTRE & HOSPICE கட்டிட நிதிக்கென கட்டாரில் பல்வேறு வழிகளிலும்  EAQ மற்றும் நமக்காக நாம் அமைப்புக்களால் மொத்தமாக சேகரிக்கப்பட்ட 1200750  இலங்கை ரூபாய்களும்  இன்று ECCH  நிருவாகக் குழுவின் தலைவர் DOCTOR இக்பால் அவர்களிடம் EAQ மற்றும் நமக்காக நாம் அமைப்புக்களின் ஏறாவூர் செயற்குழு தலைவர்களால் ஏறாவூர் ஜாமிஉல் அக்பர் பள்ளி வாயலில் வைத்து உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

இன்றைய இந் நிகழ்வில் ECCH சார்பாக அதன் தலைவர் DOCTOR  இக்பால்  அவர்கள் தலைமையிலான குழுவினரும், EAQ சார்பாக அதன் ஏறாவூர் செயற்குழு தலைவர் அஷ் ஷேக் இர்ஷாத் தலைமையிலான குழுவினரும் நமக்காக நாம் ஏறாவூர் செயற்குழு தலைவர் ஆசிரியர் ஜிப்ரி தலைமையிலான குழுவினரும் கலந்து கொண்டிருந்தார்கள். 

மேலும் இந் நிகழ்வில் உறையாற்றிய ECCH நிருவாகக் குழு தலைவர்  DOCTOR இக்பால் அவர்கள் இந்நிதி சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்ட EAQ மற்றும் நமக்காக நாம் அமைப்பினருக்கும், நிதி அளித்து உதவிய அனைத்து கட்டார் வாழ் சகோதரர்களுக்கும் உளப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ், இச்சந்தர்பத்தில் இப்பாரிய முயற்சியில் மிகுந்தசிரத்தை எடுத்துக் கொண்டு  ஈடுபட்ட, நிதி  அளித்த EAQ மற்றும் நமக்காக நாம் அமைப்பின் சகல உறுப்பினர்களுக்கும், நாங்கள் நாடி சென்ற போது எங்களுக்கு இன் முகத்துடன் நிதி அளித்து உதவிய அனைத்து கட்டார் வாழ் சொந்தங்களுக்கும் மற்றும் மேலதிக நிதி திரட்டலுக்காக EAQ நடாத்திய கிறிக்கட் சுற்றுப்போட்டியை சிறப்பாக இணைந்து நடாத்தி உதவியளித்த SUN RIDERS விளையாட்டுக் கழகத்தினருக்கும், சுற்றுப்போட்டியில் பெற்ற இரண்டாம் இடத்துக்கான பணப்பரிசை தந்துதவிய ஓட்டமாவடி EASTERN LIONS  அணியினருக்கும், சுற்றுப் போட்டியில் பங்கு பற்றியிருந்த அனைத்து அணிகளுக்கும், CEYLONIANS,  EVR KINGS அணிகளுக்கும் மற்றும் இந் நிதி திரட்டல் முயற்சிக்கு இன்னோரன்ன வழிகளில் உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் ERAVUR ASSOCIATION OF QATAR ( EAQ )  மற்றும் நமக்காக நாம் அமைப்பின் மனமாந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு உங்கள் அனைவரது வாழ்விலும், தொழிலும் அல்லாஹ் பரக்கத்தையும் நிம்மதியையும் வழங்க வேண்டும்.

1 comment:

Powered by Blogger.