பண்டாரகமயில் உணர்வுபூர்வமான சம்பவம்..!
-Tw-
பெற்றோரையே கண்டுக் கொள்ளாத பிள்ளைகள் உள்ள இந்த காலத்தில், தனது சித்தப்பாவுக்காக கல்லறையில் வசிக்கும் மகள் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
பண்டாரகம பிரதேசத்தில் இந்த உணர்வுபூர்வமான சம்பவம் பதிவாகியுளள்ளது.
பண்டாரகம, கிதெல்பிட்டிய கல்லறையினுள் தனது வயோதிப சித்தப்பாவை பாதுகாத்துக் கொண்டு இந்த மகள் வாழ்ந்து வருகிறார்.
80 வயதான திருமணமாகாத விக்ரமஆராச்சி யசோனிஸ் என்ற நபர், கடந்த 6 மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியயசாலையில் இருந்து வந்த யசோனிஸ்ஸை ஏற்றுக் கொள்வதற்கு யாரும் இல்லாத நிலையில் அவரது சகோதரரின் மகள் மாத்திரமே அவரை ஏற்றுக் கொண்டுள்ளார்.
குறித்த பிரதேசத்தின் வீட்டில் ஒரு பகுதியில் சித்தப்பாவுடன் வாழ்ந்த போதிலும், அண்மையில் பெய்த கடும் மழையில் அந்த வீடு நீரில் மூழ்கியுள்ளது.
அதன் பின்னர் சித்தப்பாவுடன் அவர் இந்த கல்லறைக்கு வருகைத்தந்துள்ளார்.
தனது சித்தப்பாவை வீட்டிற்கு அழைத்து வருவதற்கு உறவினர்கள் எதிர்ப்பு வெளியிட்டமையினால் அவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் கல்லறையில், தனது சித்தப்பாவை இந்த மகள் பாதுகாத்து வருகின்றார்.
Post a Comment