டெங்குக்கு மாணவி பலி
டெங்கு நோய்த்தாக்கத்தினால் கிளிநொச்சியில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார் என கிளிநொச்சி வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி ஜெயந்திநகரைச் சேர்ந்த இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் உயர்தர மாணவி செல்வராசா துளசி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆரம்பத்தில் டெங்கு காய்ச்சல் என கூறி வைத்தியசாலையில் குறித்த மாணவி அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வீட்டுக்கு வந்துள்ளார்.
பின்னர், குணமடைந்த மாணவிக்கு மீண்டும் கை, கால்களில் வலி எனக்கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக தற்போது பாடசாலை மற்றும் வீட்டு சுற்றுப்புற சூழல்களை துப்புரவாக வைத்திருக்குமாறு சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலாக எல்லா பிரதேசங்களிலும் பரவி வருகின்றது. இதன் காரணமாக பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment