Header Ads



மத்­ர­ஸாக்கள் அனைத்­திலும் ஒரே பாடத்­திட்டம் - வருகிறது சட்டம், மௌலவிகளுக்கு பரீட்சையும் நடக்கும்

நாட்­டி­லுள்ள பதிவு செய்­யப்­பட்­டுள்ள மத்­ர­ஸாக்கள் அனைத்­திலும் ஒரே பாடத்­திட்டம் பின்­பற்­றப்­பட்டு அந்தப் பாடத் திட்­டத்­தின்­படி மௌலவி பரீட்­சையை பரீட்­சைகள் திணைக்­களம் நடத்தும் வகையில் சட்ட மூல­மொன்று முஸ்லிம் சமய மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்­ச­ரினால் தயா­ரிக்­கப்­பட்டு பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. 

முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் இது தொடர்­பான கலந்­து­ரை­யா­டல்­களை உல­மாக்கள் மற்றும் புத்­தி­ஜீ­வி­க­ளுடன் நடத்தி வரு­கிறார்.

இது தொடர்பில் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் கருத்து வெளி­யி­டு­கையில்.

தற்­போது நாட்­டி­லுள்ள மத்­ர­ஸாக்கள் அனைத்­திலும் மௌலவி பரீட்­சைக்கு ஒரே மாதி­ரி­யான பாடத்­திட்டம் பின்­பற்­றப்­ப­டு­வ­தில்லை. எனவே, மத்­ர­ஸாக்­களின் கல்வித் திட்­டத்தை ஒன்­றி­ணைக்க வேண்­டிய தேவைப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது.

இப்­ப­ரீட்சை, பரீட்­சைகள் திணைக்­க­ளத்தின் மூலம் நடத்­தப்­பட்டால் சர்­வ­தேச ரீதியில் அங்­கீ­கா­ரத்­தையும் பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்கும். அர­சாங்க பரீட்சைத் திணைக்­களம் நடத்தும் இந்தப் பரீட்­சையில் சித்­தி­ய­டை­ப­வர்­க­ளுக்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் சான்­றிதழ் ஒன்றும் வழங்கும் வகையில் சட்ட மூலம் தயா­ரிக்­கப்­படும் என்றார்.

அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபையும் மத்­ர­ஸாக்கள் அனைத்­தி­னதும் பாடத் திட்­டங்கள் ஒரே வகையில் அமைய வேண்டும்.

ஒரே தரத்­தினைக் கொண்­ட­தாக இருக்க வேண்டும் என நீண்­ட­கா­ல­மாகக் கோரிக்கை விடுத்துவந்துள்ளதாக அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் தெரிவித்தார்.

ARA.Fareel

5 comments:

  1. நல்ல செய்தி

    ReplyDelete
  2. அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா கடந்த பத்து வருடத்திற்கும் மேலாக இவ்விடயத்தை பேசிக்கொண்டிருக்கின்றது. கடந்த 2006ம் ஆண்டில் இடம்பெற்ற ஒரு உரையின்போது, அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவின் மிக முக்கிய பதவியில் மிக நீன்டகாலமாக அங்கத்தவராக இருந்த வரும் ஒருவரினால் மேற்படி திட்டமானது, பாராளுமன்ரத்தின் அங்கீகாரத்திற்காக வைக்கப்பட்டுள்ளது, மிக விரைவில் இவ்விடயம் அமுல்படுத்தப்பட்டுவிடும் என்று வாக்குறுதியளிக்கப்பட்டது. ஒரு சகாப்தம் முடிந்து விட்டது. ஆனால் இதுவரை எதுவுமே நடக்கவில்லை. மீண்டும் முதலில் இருந்து செய்யப் போகின்றார் எமது கண்ணியத்திற்கும் மதிப்பிற்குமுரிய அமைச்சர் அவர்கள். அமைச்சர் அவர்களே நீங்கள் இத்திட்டத்தை அமுல்படுத்தாமல்தான் மீதமாக இருக்கும் நான்கு வருடங்களையும் கடத்திவிட்டு செல்லப்போகின்றீர்கள். எதுவும் நடக்கப்போவதில்லை.
    நீங்கள் பதவிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்தும், இதுவரை உங்களால் முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சிற்கான இணையதளத்தைக்கூட மீளமைக்க முடியவில்லை. இலங்கையில் அனைத்து மதத்திற்குமான அமைச்சுகள் அவர்களுக்கான இனைய தளங்களை மிக சிறப்பாக இயக்கி வருகின்றன. ஆனால் இணைய தளம் இல்லாத ஒரு கலாச்சார அமைச்சு என்றால் அது முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சு மாத்திரமாகும். முஸ்லிம் சமய கலாச்சார அமைச்சினால், முஸ்லிம் சமூகத்தின் எத்தனையோ பிரச்சினைகளுக்கு, அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா, மத்ரசாக்கள், சமூக நல அமைப்புக்களுடன் இனைந்து செயற்படுவதன் மூலம் தீர்வு காண முடியும். ஆனால் நம் எல்லோருக்கும் அதைப்பற்றி சிந்திக்க நேரமுமில்லை, நோக்கமுமில்லை, அதை எவ்வாறு எடுத்து செல்லலாம் என்ற திட்டமுமில்லை. அது மட்டுமன்றி சுய நலம், அரசியல் வேறுபாடுகள், கருத்து வேறுபாடுகள் போன்ற காரணிகளால், சமூகத்தை தலைமை தாங்குகின்றோம், வழி நடாத்துகின்றோம் எனக்கூறிக்கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றன.
    இவ்வாறானதொரு அமைச்சு எங்களுக்கு கிடைக்கப்பெற்றது இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு கிடைக்கப்பெற்ற மிகப்பெரும் வரப்பிரசாதமாகும். ஆனால் இந்த அமைச்சு காலத்தையும் வீனடித்துக் கொண்டு, அரசின் பணத்தையும் வீணடித்துக் கொண்டு பள்ளிவாயல் நிர்வாக சபை தெரிவிற்கான கடிதங்களை விநியோகித்துக் கொண்டும், அவர்களின் சில்லரை பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டும், ஈத்தம் பளம் விநியோகித்துக் கொண்டும், மீலாத் விளாக்களை நடாத்திக் கொண்டும், ஹஜ் விடயங்களில் ஈடுபட்டுக் கொண்டுமுள்ளீர்கள். உங்களின் அமைச்சிற்கு செலவு செய்யப்படும் பணத்திற்கு இந்த வேலைகள் அனைத்தும் பெறுமதியற்றதாகும்.
    ஏன் உங்களின் அமைச்சினால் இதுவரை பள்ளிவாயல் நிர்வாகிகளுக்கான குறைந்த பட்ச கல்வித் தகைமை நிர்ணயிக்கப்படவில்லை. ஒரு பள்ளிவாயல் எவ்வாறு நிர்வகிக்கப்பட வேண்டுமென்றதொரு கையேட்டை வெளியிட்டுள்ளீர்களா? பள்ளிவாயல் நிர்வாகிகளாக தெரிவுசெய்யப்படுபவர்களுக்கு ஏன் உங்கள் அமைச்சு, அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவுடன் இனைந்து அவர்களுக்கான மாகாண ரீதியான வதிவிட பயிற்சிகளை நடைமுறைப்படுத்துவது பற்றி யோசிக்கவில்லை. இதன் மூதன் மிக அதிகமான உலமாக்களுக்கு தொழில்வழங்க முடியுமே.
    இது போன்று உங்களின் அமைச்சின் மூலம் எத்தனையோ விடயங்களை சாதிக்க முடியும். ஆனால் 90ம் ஆண்டுகளில் எவ்வாறு எமது பாவப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் அமைப்புகள் இயங்கிக் கொண்டிருந்ததோ, அதே வேகத்தில்தான் இப்போதும் இயங்குகின்றது, இன்னும் 20 வருடங்களின் பின்பும் அதே வேகத்தில்தான் இருக்கும். இதற்கு காரணம், சுயநலம், பதவியாசை, சமூகநலமின்மை, எங்களுக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும், இவ்வாறு சமூக வலைத்தளங்களிலெல்லாம் எழுதுபவர்கள் மடையர்கள், விளக்கமற்றவர்கள், நாங்கள் நபிமார்களின் வாரிசு, 7 வருடங்கள் மத்ரசாவில் மார்க்கத்தையும், சட்டதிட்டங்களையும் கரைத்து குடித்து விட்டு வந்திருக்கின்றோம் என எண்ணிக்கொண்டும், வரிந்து கட்டிக்கொண்டு தள்ளாடும் வயதிலும், ஆயுட்கால தலைவர்களாகவும் காணப்படும் உலமாக்களாகும்.

    ReplyDelete
  3. Best comon from irandam kurukku theru. Dear secretary of Islamic Afairs please done your actual work

    ReplyDelete
  4. மிகவும் வரவேப்புக்குறிய விடயம் குர் ஆனையும் கதீதையும் மாத்திரம் கற்பிப்பத்த்ற்கு ....

    ReplyDelete

Powered by Blogger.