Header Ads



முஸ்லிம் கடைகள் திறப்பு, தம்புள்ளையில் சுமுக நிலை, இருதரப்பு சமாதானத்திற்கு இணக்கம்

-ARA.Fareel-

தம்­புள்ளை நக­ரி­லுள்ள முஸ்­லி­ம் ஒருவருக்கு சொந்­த­மான உண­வகம் ஒன்றின் மனே­ஜ­ருக்கும் வாடிக்­கை­யாளர் ஒரு­வ­ருக்கும் இடையில் இடம்­பெற்ற தாக்­குதல் சம்­ப­வத்­தை­ய­டுத்து வியா­ழக்­கி­ழமை மாலை முதல் சனிக்­கி­ழமை வரை மூடப்­பட்­டி­ருந்த முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலையங்கள் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை காலை முதல் திறக்­கப்­பட்­டன.

தாக்­குதல் சம்­ப­வத்­தினால் காயங்­க­ளுக்­குள்­ளாகி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு பின்பு பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்ற உத்­த­ரவின் பேரில் எதிர்­வரும் 22 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள உண­வ­கத்தின் முகாமையாளரும் பெரும்­பான்மை சமூ­கத்தைச் சேர்ந்த வாடிக்­கை­யா­ளரும் இவ்­வி­வ­கா­ரத்தை சமா­தா­ன­மாகத் தீர்த்துக் கொள்ளத் தீர்­மா­னித்­துள்­ளனர்.

தம்­புள்ளை பள்­ளி­வாசல் தலைவர் மொஹமட் கியாஸ் மற்றும் நிர்­வாக சபை உறுப்­பினர் ரஹ்­மத்­துல்லாஹ் இரு­வரும் கடந்த சனிக்­கி­ழமை பள்­ளே­கலை சிறைச்­சா­லையில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள பெரும்­பான்மை இனத்­த­வரை சந்­தித்து இது தொடர்­பாக பேச்­சு­வார்த்தை நடத்­தினர்.

பெரும்­பான்மை இனத்­த­வரும் பிரச்­சி­னையை சமா­தா­ன­மாகத் தீர்த்துக் கொள்ள இணக்கம் தெரி­வித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து இன்று திங்­கட்­கி­ழமை தம்­புள்ளை நீதிவான் நீதி­மன்றில் மனு­வொன்­றினைத் தாக்கல் செய்து சமா­தா­ன­மாக பிரச்­சினை தீர்த்துக் கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் எதிர்வரும் 22 ஆம் திதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று தம்­புள்ளை சிங்­கள வர்த்­தக சங்­கத்­தினர் கூட்­ட­மொன்­றினை நடத்தி நிலைமை தொடர்பில் கலந்­து­ரை­யா­டினர்.

No comments

Powered by Blogger.