Header Ads



அமைச்சர் சம்பிக்கவின் மறுபக்கம்..!

எனது நண்பன் ஒருவனின் காதலியைக் கேட்டு அமைச்சர் சம்பிக்க ரணவக்க என்னை துன்புறுத்தியதோடு மனநிலை பாதிக்கப்படவன் என்ற பட்டத்தையும் சூட்டினார் என ஹர்ச திலகசிறி என்பவர் தெரிவித்தார்.

இவர் அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்கவிடன் தொழில் புரிந்த ஒருவர். நேற்றைய தினம் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை பகிரங்கமாகக் கூறினார்.

நான் அமைச்சர் சம்பிக்விடம் 16 வருடங்களுக்கும் மேலாக சேவை புரிந்து வந்தவன்.

அப்போது நான் அமைச்சரின் வீட்டில் இருந்தேன், எனது நண்பன் ஒருவனுடன் இருந்த பெண்னை அமைச்சர் தன்னிடம் சேர்த்து வைக்குமாறு கேட்டார்.

நான் முடியாது என கூறியதால் இருவருக்கும் தர்க்கம் ஏற்பட்டது. பின்னர் அவரிடம் இருந்து பிரிந்து சென்றேன். எனது பாதுகாப்பு பயம் காரணமாக அங்கிருந்து நான் ரத்மலானைக்கு சென்றேன்.

அங்கு சென்ற என்னை சந்தன ரணசிங்க மற்றும் அமைச்சர் சம்பிகவின் வாகன சாரதி பிரதீப் அல்விஸ், குருந்துவத்த பொலிஸ் அதிகாரி ஹேரத் ஆகியோர் அமைச்சரின் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறி கடத்திச் சென்றார்கள்.

அவர்கள் என்னை அங்கொடை மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவமனைக்கே பலவந்தமாக கடத்திக் கொண்டு சென்றார்கள்.

அமைச்சர் ராஜித சேனாரத்னவின் செயலாளர் உபுல் குணசேகரவிற்கும் இதற்கு தொடர்பு உண்டு. அவரே அங்கு வைத்தியராக இருந்தார் அங்கு எனக்கு மின்சார சிகிச்சையும் வழங்கப்பட்டது.

அமைச்சர் சம்பிக்க இதனைச் செய்தது அவர் பற்றிய இரகசியங்களை வெளிப்படுத்துவேன் என்ற பயத்தின் காரணமாகவே ஆகும். இப்போது நான் வெளியே வந்து விட்டேன் சான்றிதழும் என்னிடம் இருக்கின்றது.

மேலும் எனக்கு பைத்தியகாரன் பட்டம் கட்டினீர்களே நீங்கள் பைத்தியம் இல்லையா எனவும் நான் அமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றேன் என ஹர்ச திலகசிறி தெரிவித்தார்.

1 comment:

  1. so-called yaha palana. This government is good-for-nothing.

    ReplyDelete

Powered by Blogger.