Header Ads



''தேசப்பற்றை வளர்க்க, முஸ்லிம் சமூகம் தயாராக வேண்டும்''


-ஸபா ரௌஸ் கரீம்-

04 .02  1948    எமது நாட்டின்  விடுதலை நாள் என்பது  அனைவருடைய அடிமனதில் இருக்கவேண்டும் 

சுகந்திர தினம் என்றால்  சிறுவர்களுக்கு கொண்டாட்டம் தான்   காரணம்  முதலில் சிறுவர்கள்   கலண்டரை    பார்ப்பார்கள்  பின்னர் அதில் பெப்ரரி 4  ம் திகதியை சிவப்பால் போடப்பட்டிருக்கும் தகப்பனிடம் சுகந்திர தினம் என்றால் என  கேட்பார்கள்  உங்களுக்கு பாடசாலை  விடுமுறை  மகன் எனக்கும் அலுவலக விடுமுறை   என ஒரு சில படித்த தந்தை சொல்வார்கள்  மீண்டும் அந்த பிள்ளை   ஏன் வாப்பா விடுமுறை என பிள்ளை  கேட்டால்  தொலைக்காட்சியை பாருங்கள் நாளை புரியும் என்று பதில்கொடுப்பார்கள் அனைவரும் அல்ல ஒரு சிலரை கூறுகின்றேன் 

 நாளை   பிள்ளைகள் தொலைக்காட்சியை பார்க்கும் காலிமுகத்திடலில்    நாட்டின்  தேசியக்கீதம் இசைக்கப்பட்டு பின்னர்  நாட்டின் தேசிய கொடி பறக்க விடப்படும் அது போன்ற பல காட்சிகள்  இடம்பெறும் அதன் வரலாறுகள் பிள்ளைகளுக்கு  புரியாது   அந்த நிகழ்வுகள்  எம் சிறுவர்களுக்கும் ,பெரியோர்களுக்கு இது ஒரு பொழுது போக்காக அமைகின்றது அவர்களை குற்றம் சொல்ல முடியாது காரணம் அவர்களுக்கு சுகந்திர தினம் என்றால் என்ன ? சுகந்திரப் போராட்டத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் பங்களிப்பு என்ன சொல்லி கொடுக்க யாருமில்லை  அதனால்தான் இன்று இதுவும் ஒரு விடுமுறை தினம் போல அலட்சியமாக சிலர் நடந்து கொள்கின்றனர் 

எமது பள்ளிவாயல்களில் கூட  சுகந்திரத்துக்காக பங்காற்றிய முஸ்லிம் அறிஞ்சர்களான  Dr பதியுதீன் மஹ்மூத்  ,Dr T.B.ஜாயா,Dr M.C.M.கலீல், Sir ராசிக் பரீட்  போன்ற சமூக  முன்னோடிகளின் சுகந்திர தினத்துக்கான பங்களிப்பு ,ஈடுபாடு என்பவற்றை எம் முஸ்லிம் மக்களுக்கு தெளிவு படுத்த மார்க்க அறிஞ்சர்களுக்கும் கடமை உண்டு காரணம் இஸ்லாம் தேசப்பற்றை  ஆதரிக்கிறது. அதற்க்கு சிறந்த எடுத்துக்காட்டு உதாரணமாக இவ் சம்பவத்தை தருகின்றேன் 

நபி (ஸல்) அவர்கள் மக்காவை விட்டும் மதீனாவுக்கு வந்த போதிலும் சதாவும் தாம் பிறந்த தேசத்தைப் பற்றிய கவலையுடனே இருந்திருக்கிறார்கள். ஆனால் காலப் போக்கில் மதீனா பற்றிய அன்பு தமது உள்ளத்தில் வர வேண்டும் என்ற அவாவும் அவர்களுக்குத் தோன்றியது. ஏனெனில் தமது த.வாப் பிரச்சாரம் வெற்றி பெறத் தளமாக இருந்த பூமி அந்த மதீனா மாபூமி தான். எனவே தான் தமக்கு மதீனாவின் மீது பற்றை உண்டாக்கும் படி அல்லாஹ்விடத்திலே கீழ் வருமாறு பிராத்தனையும் புரிந்தார்கள்.

யா அல்லாஹ்! எனக்கு மக்காவின் மீது எவ்வாறு அன்பு இருக்கிறதோ அதே போன்ற பற்றை மதீனாவின் மீதும் உண்டாக்குவாயாக. அல்லது அதை விட அதிகமான அன்பை உண்டு பண்ணுவாயாக. (நூல்: புகாரி )

போன்ற சம்பவங்கள் வருகின்ற இதுலிருந்து நபியவர்களின்  தேசப்பற்றை புரிந்துகொள்ளலாம் 

நாட்டில் வாழும் பௌத்த  ,கிறிஸ்தவ  ,தமிழ் மக்களோடு  நாங்களும்    இணைந்து  வருகின்ற  நாட்டின்  69 வது   சுகந்திர தினத்தை நாளை 04 .02 .2017 தினத்தன்று   ஒவ்வொரு வீடுகளிலும் ,கடைகளிலும் தேசிய கொடியை பறக்க விட்டும் ,வெளிநாட்டில் வசிப்பவர்கள்   சமூக வலை தளங்களிலும் எம் நாட்டின் தேசிய கொடியை பதிவேற்றி ,இனிப்புகளும் வழங்கி மகிழ்ச்சியுடன்  சுகந்திர தினத்தை கொண்டாடி, தேசப்பற்றை வளர்க்க எம் முஸ்லிம் சமூகம் நாளை  தயாராகவேண்டும் 

3 comments:

  1. We all love Makkah and Madeena. This is because of Allah chosen these city including masjidul aqsa.

    ReplyDelete

Powered by Blogger.