பொறுமை காத்து, சிவப்புக் கோட்டையும் தாண்டி விட்டோம் - மிரட்டுகிறார் மரிக்கார்
"கொலன்னாவை, மீதோட்டமுல்லை குப்பைப் பிரச்சினை சம்பந்தமாக மகா சங்கத்தினரதும் பொது மக்களினதும் பொறுமை தற்போது எல்லை கடந்தவிட்டது. பொறுமை காத்து இப்போது சிவப்புக் கோட்டையும் தாண்டி விட்டோம். பெப்ரவரி மாதத்தின் பின் கொழும்பின் குப்பைகளை இனி எந்த வகையிலும் கொலன்னாவையில் கொட்ட இடமளிக்கப் போவதில்லை" என்று கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கூறினார்.
கொலன்னாவை குப்பைப் பிரச்சினை சம்பந்தமாக, மகாசங்கத்தினருடன் இணைந்து கொலன்னாவையில் நடத்திய விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
கொழும்பு மாநகர சபையால் தினசரி சேகரிக்கப்படும் குப்பை கடந்த பல வருடங்களாக தினமும் கொலன்னாவை மீதோட்டமுல்லை பிரதேசத்தில் கொட்டப்படுகின்றது. இதனால் கொலன்னாவை பகுதி மக்களின் சுகாதாரம் உட்பட அன்றாட வாழ்வு முறை பாரிய பாதிப்பை சந்தித்தள்ளது. தற்போது இந்த குப்பை மேடு 180 அடி உயரமாக உள்ளது. மூன்று மில்லியன் தொன் குப்பைகள் அங்கு காணப்படுகின்றன. கொழும்பில் சேகரிக்கப்படும் 700 முதல் 900 தொன் வரையான குப்பைகள் தினசரி இங்கு கொட்டப்படுகின்றன. இதனால் கொலன்னாவை மக்களாகிய நாங்கள் தான் பாரிய பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றோம்.
வேறு யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்தத் துன்பங்களை இனிமேலும் எம்மால் பொறுத்துக் கொள்ள முடியாது. காட்டுக்குள் இருக்கும் மிருகங்களை விட மோசமான நிலைக்கு இந்தப் பிரதேச மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஏகலையில் உள்ள ஓர் இடத்தில் மக்களுக்கு எந்தப் பிரச்சினையும் இன்றி குப்பைகளை கொட்டுவதற்கான ஒரு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுமதிப்பத்திரமும் இதற்கு வழங்கப்பட்டள்ளது. யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இந்த இடத்தில் குப்பைகளைக் கொட்டலாம். ஆனால், இன்னமும் அந்தத் திட்டம் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றது.
கொழும்பு மாநகர சபைக்கு அடுத்த மாதம் முதல் இங்கு குப்பைகளை கொட்ட நாம் இடமளிக்க மாட்டோம். இனிமேல் இந்த விடயத்தில் பொறுமை காக்க முடியாது. அரசியலை ஒருபுறம் வைத்து விட்டு பிரதேச மக்களோடும் மகாசங்கத்தினரோடும் இணைந்து நாம் உறுதியான ஒரு முடிவுக்கு வருவோம்" என்றார்.
These politicians (including S.M. Marikkar UNP MP) will stage dramas by releasing "press statements" because all of them have been well taken by the powers that be. These are Muslim politicians who DO NOT HAVE A POLITICAL PRINCIPLE OR IDEOLOGY. For their personal gains, they will do anything trying to show the Muslims that they are the “SAVIOURS” of the community, but “DECEPTION” is what they do, all of them. Their objective is to dupe the Muslim voters and get their votes by deceiving the poor Muslims during elections and become elected and then do NOTHING to the community. Then their party will get “BONUS SEATS” and party officials will fight for those seats as we see above. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere, to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, and safeguard the DIGNITY of our community has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah.
ReplyDeleteNoor Nizam, Convener – “The Muaslim Voice”.