Header Ads



'தொழுகையை எதற்காகவும், விட முடியாது' - மனதை கலங்கவைக்கும் நிகழ்வு


சவுதி அரேபியாவில் உள்ள அப்ஹா (ஆசிரின் தலைமையகம்) என்ற இடத்தில்!!

ஓர் மணப்பெண் மக்ரிப் தொழுகையை முடித்து விட்டு திருமண நிகழ்வுக்காக தன்னை (மணப்பெண்) அலங்காரம் செய்து கொண்டாள்,

நிகழ்ச்சிக்கு தயார் ஆகி தன் அறையில் இருந்து வெளியேறும் நேரத்தில் இஷா உடையே அதான் சப்தத்தை கேட்டாள், மறுபடியும் உழு செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த அந்த மணப்பெண்!!

தன் தாயிடம் கேட்டாள்: ''அம்மா!! நான் உழு செய்துவிட்டு இஷா தொழுது கொள்கின்றேன்'' என்று!!

தாய் அதிர்ச்சியானாள்! ''என்ன விளையாடுகிறாயா? எல்லோரும் வெளியே உனக்காக காத்து கொண்டு இருகின்றோம்! நீ உழு செய்தால் உன் அலங்காரம் என்ன ஆகும்! தண்ணீரால் அனைத்தும் சென்று விடுமே!!!நான் அனுமதிக்க மாட்டேன்!! நீ இப்பொழுது தொழ வேண்டாம்!! ஒரு வேளை நீ உழு செய்து அலங்காரத்தை அழித்து விட்டால் அவ்வளவுதான்'' என்று!!!

அந்த மணப்பெண் பதில் அளித்தால் தன் தாயுக்கு; "அம்மா! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் ஒழு செய்து தொழுகை நடத்தும் வரை இந்த அறையில் இருந்து வெளியேற மாட்டேன்" என்று!

''அம்மா!! அறிந்து கொள்ளுங்கள்!! என்னை படைத்தவனுக்கு நான் நிறைவேற்ற வேண்டிய கடமை தொழுகை அதை என்னால் எதற்காகவும் விட முடியாது!''

அந்த பெண்ணின் தாய் : நீ உழு செய்து தொழுது விட்டு அலங்காரம் இல்லாமல் வெளியே வந்தால் திருமண நிகழ்ச்சியில் நீ அழகாக இருக்க மாட்டாய்!! உறவினர்கள் உன்னை கேலி செய்வார்கள்!!

அந்த மணப்பெண் தன் தாயை சிரித்த முகத்தோடு பார்த்து கூறினாள்:-

''என் தாயே படைப்பினங்களின் கண்களுக்கு முன் அழகு இல்லாமல் இருப்பேன் என்று கவலை கொள்கின்றீர்கள் ஆனால் தொழுகையை நிறைவேற்றவில்லை என்றால் என்னை படைத்தவனின் கண்களுக்கு அழகாக இருப்பேனா??''

என்று கூறி விட்டு உழு செய்ய ஆயுத்தமானாள்!! பிறகு தொழுகையை ஆரம்பம் செய்தாள். 

சஜ்தாவில் நீண்ட நேரம் இருந்தாள்

தாய் சந்தேகம் கொண்டு எழுப்பும் போது!!!

அந்த பெண்ணின் உயிர் பிரிந்திருந்தது!!!!!

நபியவர்கள் சொன்னார்கள் :

யாருக்கு அல்லாஹ் நலவை நாடுகின்றானோ அவர்களை (நல்ல) செயல்கள் செய்பவராக மாற்றுவன்!!

ஒரு மனிதர் கேட்டார்: அல்லாஹ்வின் தூதரே (அல்லாஹ்) எப்படி (நல்ல) செயல்கள் செய்பவராக (மாற்றுவன்!!)

அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள்:

மரணத்திற்கு முன்னால் நல்ல செயலை செய்ய கூடிய பாக்கியத்தை அல்லாஹ் அந்த மனிதருக்கு தருவான்!!! பிறகு அந்த நிலையிலேயே அல்லாஹ் அந்த மனிதரின் உயிரை கை பற்றுவான்!! (திர்மதி)

2 comments:

  1. யா அல்லாஹ் எங்களது ஈமானையும் பலப்படுத்தி விடுவாயாக.

    ReplyDelete

Powered by Blogger.