முஸ்லிம் தலைமைகள், பாதுகாக்கபடவேண்டியதன் அவசியம்..!
-Eng.M.M.M.Arshad-
சர்வதேசம் முதல் சாதாரண ஊர் வரை இன்று முஸ்லிம்கள் அனைத்திலும் இலக்குவைக்கபட்டிருகிறார்கள் . முஸ்லிம்களை பலவீனப்படுத்தாலே அவர்களின் இலக்கு. ஆனால் இதனை முஸ்லிம் சமூகம் புரிந்துகொண்டதாக தெரியவில்லை . தலைமைகளை பலவீனப்படுத்திவிட்டால் சமூகங்கள் தானாகவே பலவீனப்பட்டுவிடும் . அரசியலிலிருந்து ஏன் இஸ்லாத்தை போதிக்கும் தலைமைகள் வரை இன்று முஸ்லிம்கள் இந்த பலவீனத்துக்கு உட்பட்டிருகிறார்கள் . சில செயற்பாடுகள் , பேச்சுகள் நேர்மையாக , உண்மையாக இருந்தாலும் அதனை பிழையான நேரத்தில் சூழலில் பயன்படுத்திவிட்டால் அதிகபாதிப்புக்கள் வரவாய்ப்புண்டு. இதைதான் காலம் , சூழல் அறிந்து செயற்படல் என்போம் .
உள்நாட்டை எடுத்துகொள்வோம் , இன்று அரசியல் ரீதியாக முஸ்லிம்கள் பாரிய நெருக்கடிக்கு உட்பட்டிருகிறார்கள். முஸ்லிம்களுக்கு எதிரான காய்நகர்த்தல்கள் இன்று நரித்தனத்தில் செயட்படுத்தப்டுகின்றன . முஸ்லிம் தனியார் சட்டம் , எல்லை நிர்ணயம் , மாட்டிறைச்சி இவைகள் வித்தியாசமான முறையில் வெளியே கசியாத வகையில் நகர்த்தப்படுகின்றன . இவ்வாறான சந்தர்ப்பங்களில் எமக்கு பௌதீக ரீதியில் இருக்கும் பலம் அரசியலே . தலைமைகள் அரசியல் ரீதியான சமூக உரிமைகளை வென்றெடுக்க ஆக்ரோசமாகவும் நேர்மையாகவும் தங்கள் அரசியல்பலத்தை பிரயோகிக்கவேண்டியிருகிறது. அரசியல் தலைமைகள் சரியாக செயற்படுகின்றனவா இல்லையா என்பது இரண்டாம் நிலை. தலைமைகளிலும் நிறைய பிழைகள் உண்டு ஆனால் அதனை அலசும் நேரமில்லை இது என்பது புரியப்படவேண்டும் . அரசியல் யாப்பு சீர்திருத்தம் செய்யபடுகின்ற இந்த நேரத்தில் தேசிய ரீதியாக அரசியல் தலைமைத்துவங்கள் கட்டாயமாக ஒற்றுமைப்பட்டு முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகேட்டு நிற்கும் நேரமாக இது இருக்கிறது .
அரசியலுக்கு அப்பால் நின்று, தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம் தலைமைகளை பலப்படுத்தவேண்டிய நிலை இருக்கிறது . ஆனால் , இதற்கு முற்றிலும் மாறாக ,அரசியல் ரீதியாக முஸ்லிம்களுக்கிடையே பாரிய மோதல் ஒன்று ஏற்படுத்தபட்டிருகிறது. கட்சிகளுக்குள்ளேயும் உட்பூசல்கள் ஏற்பட்டு இரசகசியங்கள் கக்கபடுகின்றன. இவ்வாறான சந்தர்பங்களில் தலைமைகள் கட்டாயம் பலவீனப்பட்டுவிடும் .இதனால் தேசிய ரீதியில் முஸ்லிம்கள் எதிர்கொண்டிருக்கும் சவால்கள் முஸ்லிம் சமூகத்திடையே மறக்கடிகப்பட்டு முஸ்லிம்களின் தேசிய உரிமைகள் தோற்கடிக்கப்படும் அபாயம் இருக்கிறது. அரசியல் கட்சிகளை வளர்ப்பதற்கு மாற்றுவழிகள் உண்டு. ஒருவொருகொருவர் சேறு பூசாமல் சேவைகள் செய்து தங்கள் செல்வாக்கை அதிகரிக்கமுடியும் . இதுதான் நேர்மையான வழி . இந்த பிரச்சனைகளுக்கு கட்சிகளும் தலைமைகள் முக்கிய காரணமே . ஆனால் அதனை பேசும் நேரம் இதுவல்ல என்பதை அரசியலுக்கு அப்பால் நின்று அனைவரும் புரிந்துகொண்டு வலைதளங்களில் நடந்துகொள்ளல் காலத்தின் தேவையாக இருக்கிறது .
தலைமைகள் பலவீனப்படுவதால் ஏற்படும் விளைவுகள் .
1. தலைமைகள் பலவீனப்பட்டால் குற்றங்களிலிருந்து தப்பிக்க உதவிதேடி அரசின் காலில் தங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்படும் .
2. இந்த நிலை வந்தால் அரசிடம் சமூக ரீதியான உரிமைகளை உரிமையாக கேட்கமுடியாது .
3. இதனால் முஸ்லிம் தலைமைகள் தேசிய பிரச்சனைகளை மறந்து தங்கள் குறைகளை மறைக்க மக்களிடையே போராடவேண்டிய நிலை ஏற்படும் .
4. இதனால் கட்சி அழிந்துவிடுமோ என்று அஞ்சி தலைமைகள் தங்கள் கட்சி / இயக்கங்களை பலபடுத்த முயற்சிபார்கள் .
5. அப்போது கட்சி ரீதியாக தொண்டர்கள் மோதிக்கொள்வார்கள் .
6. மேலும் , தலைமைகளின் குறைகளை பேசியவர்களுக்கு எதிராக தொண்டர்கள் போராடுவார்கள் .
7. இறுதியாக , முஸ்லிம் தலைமைகளும் தொண்டர்களும் முஸ்லிம்களின் தேசிய பிரச்சனைகள் குறித்து மறந்துவிடுவார்கள்
8. அரசாங்கம் தங்கள் காரியங்களை இலகுவாக நிறைவேற்றிவிடும்
இவ்வாறான அபாயங்கள் இருக்கும் நிலையில் குறைந்தது தற்போதைய சூழ்நிலையில் முஸ்லிம் கட்சி தலைமைகளை பலவீனபடுத்தாமல் நடந்துகொள்வது முக்கியமே. முஸ்லிம் தலைமைகளும் இவ்வாறான பலவீனங்களுக்கு உட்படாதவகையில் தங்கள் பாதுகாத்து அரசியலை நேர்மையாக செய்வதற்கு தயார்படுத்தவேண்டும் . அரசியல் சூழல் இன்று இன்று மாறியிருக்கின்றது . பழமையான அரசியல் திட்டமிடல், யாப்புக்கள் என்பன மீள்பரிசீலனை செய்யப்பட்டு சமகாலத்துக்கு ஏற்றால்போல் மாற்றியமைக்கப்படவேண்டும். முன்பிள்ளதவாறு படித்த புதியவர்கள் இன்று அரசியலுக்கு வருவது அதிகமாகிவிட்டது. எனவே அனுபவமிக்க பழையவர்கள் தாங்களாகவே முன்வந்து புதியவர்களுக்கு சந்தர்பங்கள் வழங்கவேண்டும் . பதவி என்பது ஒரு நோய் . அதிலும் அரசியலில் நீண்டகாலம் பதவியில் இருந்துவிட்டால் அவர்கள் அந்த கதிரையை விட்டு எழும்புவது கடினம் . எனவே அவர்களின் கதிரைக்கு ஆபத்து வந்தால் அதற்காக எதையும் செய்யும் மனநிலைக்கு உட்படலாம் . எனவே இவ்வாறான விளைவுகளை கருத்தில்கொண்டு முஸ்லிம் தலைமைகள் தங்கள் கட்சி யாப்புகளை சீர்திருத்தவேண்டியிருகிறது . எமது பிழையான திட்டமிடலே பல மோசமான பின்விளைவுகளுக்கு காரணமாக இருக்கிறது .
இந்த விழிப்புணர்வுகள் தலைமை முதல் அடிமட்ட மக்கள் வரை கொண்டுசெல்லப்படவேண்டும். இல்லாவிட்டால் சதிக்குள் அகப்பட்டு முஸ்லிம் சமூகம் மீட்சிபெற நீண்ட காலங்கள் எடுக்கலாம். முஸ்லிம்களின் வீழ்சிக்கு பின்னால் ஒரு பாரிய சதி இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளவேண்டும் . அந்த சதி செய்யப்பட எமது பலவீனங்களே காரணம் . எமது அரசியல் தலைவர்கள் அனைவரும் தேசிய ரீதியாக ஒற்றுமைபடவேண்டிய சூழலிலையே இன்று நாம் இருக்கிறோம் . இவர்களை பலவீனபடுத்துவதை அனைத்து தரப்பினரும் இன்று நிறுத்திகொண்டு அவர்களை பலப்படுத்தி சீர்படுத்தி அரசியல் ரீதியாக எமது உரிமைகளை வென்றெடுக்க அனைத்து தொண்டர்களும் போராடவேண்டும் என்பதே நடுநிலையான முஸ்லிமின் எதிர்பார்ப்பாகும் .
Post a Comment