ஹெல உறுமய, ரணிலுடன் நெருங்குகிறது
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் அடுத்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யானை சின்னத்தின்கீழ், நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியில் ஜாதிக ஹெல உறுமய போட்டியிட்டது.
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி, கடந்த நாடாளுமன்றத் தேர்தரலை முன்னிட்டு, 2015 ஜீலை மாதம் 05 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான இந்தக் கூட்டணயில் ஏழு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் போட்டியிட்ட இந்தக் கூட்டணியில் 106 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment