Header Ads



கோத்தபாயவை சிறையில் தள்ளும் விவகாரம், ஜனாதிபதியின் கரங்களில்..!

மிக் விமானக் கொள்வனவு தொடர்பில் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக உயர்மட்ட பொலிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இந்த விசாரணையுடன் தொடர்புடைய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு நிதி மோசடி விசாரணை பிரிவு காத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர் மட்ட அரசியல் பிரமுகர்கள் பச்சைக் கொடி காண்பித்தார்கள் என்றால்,கோத்தாவை கைது செய்வது உறுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைப்புகளில் இருந்து உயர் மட்ட புள்ளிவிபரங்களை கைது செய்வதற்கு முன்னர் அறிவிக்க வேண்டும் என கடந்த வருடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.

கோத்தபாய ராஜபக்ஷவிடம் இந்த முறைகேடு தொடர்பில் பல முறை நிதி மோசடி விசாரணை பிரிவினர் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

மிக் விமான கொள்வனவு தொடர்பாக நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன

இந்த மிக் விமான கொள்வனவு முறைகேடு தொடர்பில் ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை இன்டர்போல் மூலம் கைது செய்வதற்கான உத்தரவும் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

உதயங்க வீரதுங்க முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மருமகன் ஆவார்.

1 comment:

  1. கைது என்பது பகல் கனவு... கைது இடம்பெறாது என உறுதியாக கூறுகிறேன்.. இதுதான் நல்லாட்சி...

    ReplyDelete

Powered by Blogger.