Header Ads



சிங்கப்பூரின் சிறந்த, நண்பன் ரணில் - அந்நாட்டு பிரதமர் பேஸ்புக்கில் அறிவிப்பு


சிறிலங்காவுடன் இந்த ஆண்டில் சுதந்திர வர்த்தக உடன்பாடு கையெழுத்திடப்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற அதிகாரபூர்வமற்ற பேச்சுக்களின் பின்னர், அவர் இந்தக் கருத்தை தமது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

அவுஸ்ரேலியாவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கிருந்து நேற்று நாடு திரும்பினார். நாடு திரும்பும் வழியில் அவர் சிங்கப்பூரில் குறுகிய நேரம் தங்கியிருந்த போது, சிங்கப்பூர் பிரதமரை அதிகாரபூர்வமற்ற முறையில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

நேற்றுமுன்தினம் இராப்போசன விருந்துடன் இடம்பெற்ற இந்தச் சந்திப்புக்குப் பின்னர், சிங்கப்பூர் பிரதமர் முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில்,

‘சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூரின் சிறந்த நண்பன். பலமுறை அவர் இங்கு வந்து சென்றுள்ளார்.

நாம் கலந்துரையாடிக்கொண்டிருக்கும் சுதந்திர வர்த்தக உடன்பாடு குறித்து அவருடன் பேசினேன். இது இந்த ஆண்டில் நிறைவடையும் என்று நம்புகிறோம்.

சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்காவுக்கு வருமாறு அவர் நம்பிக்கையுடன் எனக்கு அழைப்பு விடுத்தார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.