Header Ads



தடியடி தாக்குதல் நடத்தக் கூடாது - மகிந்த

மாலபே சைட்டம் நிறுவனத்திற்கு எதிராக மருத்துவ மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தின் மீது கண்ணீர் புகைக்குண்டு மற்றும் தடியடி தாக்குதல் நடத்தக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமது குறைகளை முன்வைக்க வேறு ஒருவரும் இல்லாத காரணத்தினாலேயே தமது குறைகளை கூற ஜனாதிபதியை தேடிச் செல்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

குருணாகல் பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ மாணவர்கள் எதிர்கால மருத்துவர்கள், அவர்கள் எமது பிள்ளைகள் என்பதால் அவர்கள் கூறுவதை செவி கொடுத்து கேட்க வேண்டும். மாணவர்களின் கோரிக்கை நியாயமானதாக இருந்தால், நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இலங்கை மருத்துவசபை ஒரு சுதந்திரமான அமைப்பு, அதில் தலையிடக் கூடாது. மருத்துவ பீடத்தில் இருந்து வெளியேறும் நபர்கள் மருத்துவ தொழிலுக்கு தகுதியானவரா இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை மருத்து சபைக்கு இருக்க வேண்டும்.

அப்படியில்லை என்றால் சகலரும் மருத்துவர்களாக மாற தீர்மானித்து விடுவார்கள் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.